தவக்காலம் தொடங்கிற்றே...............................
தவக்காலம் தொடங்கிற்றே............................... வருடம் தோறும் வந்து போகும் இத்தவக்காலம் எம்மை மனமாற்றத்துக்கு அழைப்பு விடுகிறது. தவக்காலம் என்றவுடன் நாங்கள் ரொம்பவும் பிஸி ஆகிடுவோம். நாற்பத்தேழு நாள் விரதம் இருப்போம், மரக்கறி சாப்பிடு ... வோம். காசு செலவழித்து மைல் கணக்கில் சென்று சிலுவை பாதை செய்வோம். ஏழைகளுக்கு உதவி செய்வோம், ஆனால் இறைவனோ " "உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்: எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்" (ஓசேயா 6 : 6 ), அதலால் "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" ( யோவேல் 2 :13 ). என்கிறார் . ஆகவே இறைவன் எம்மிடம் எதிர் பார்ப்பது எமது மனதின் மாற்றத்தையே. " இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி ...