Posts

Showing posts from October, 2013

Collection from Tamilcube

Image
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Goethe. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr. செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. - Dr. David Schwartz நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன் செய்! ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும். முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி விடாமுயற்சி அரிய செயல்...

இன்றைய இலங்கையின் தேவை

இன்றைய இலங்கையின் தேவை புதிய விகாரைகளோ, கோயில்களோ, கிறீஸ்தவ ஆலயங்களோ, பள்ளிவாசல்களோ தேவையில்லை.ஆனால் புதிய பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள்,தொழிற்பயிற்சி கல்லூரிகள், மாணவர் விடுதிகள் தேவை. சிலைகள் மேல் வைக்கத் தங்கக்கீரீடங்கள் தேவையில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. சலவைக்கல் வழிபாட்டுக் கூடங்கள் தேவையில்லை. வீடிழந்தோர்க்கு வீடு தேவை. பட்டுத்துணிகள் சிலைகளுக்குத் தேவையில்லை. பட்டினி கிடப்போர்க்கு உணவு தேவை. உடுக்க உடை தேவை இவைகள் தான் இன்றைய இலங்கைத்திரு நாட்டின் எதிர்பார்ப்புக்கள்.