† தவக்காலம் முதல் ஞாயிறு †
† தவக்காலம் முதல் ஞாயிறு † (மார்ச் 5, 2017) † தொ.நூ. 2:7-9, 3:1-7 † † உரோ 5:12-19 † † மத் 4:1-11 † † எந்தப் பக்கம்? 'ஏங்க...உங்களத்தான்... நீங்க எவ்வளவு நாளா இந்த ஏதேன் தோட்டத்தில் இருக்கீங்க. இங்க இவ்ளோ மரங்கள் இருக்கே. எல்லா மரங்களோடு பழங்களையும் நாம சாப்பிடலாமா?' 'எவ்ளோ நாளா இருக்கேன்னு தெரியல. ஆனா, எல்லா மரங்களோடு பழங்களையும் சாப்பிடலாம். நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொன்னார்.' 'அது என்னங்க நன்மை தீமை அறியும் மரம்?' 'அதோ...அந்தா தோட்டத்தின் நடுவுல தெரியுதா பார் ஒரு மரம்!' இப்படித்தான் பேசியிருப்பார்கள் நம் முதல் பெற்றோர் ஆதாமும் ஏவாளும். இன்றைய முதல் வாசகத்தில் ஏவாளும், பாம்பும் பேசும் உரையாடலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அலகையும் பேசும் உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய இரண்டாம் வாசகம் இரண்டு பேரையும் பொருத்திப் பார்க்கிறது. கடவுள் பழங்களைப் பற்றியும், மரத்தைப் பற்றியும் ஆதாமிடம் சொன்னபோது ஏவாள் 'பிறக்கவே' இல்லை. அப்படி இருக்க கடவுள் சொன்னதாக அவர் பாம்பி...