அன்னையர் தினம்: second sunday of May
நாளை அன்னையர் தினம்: தாயை இறுதிவரை காப்போம் தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் அனைவரும் தாயை இறுதிவரை காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான். மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத்தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலமும், இந்திய நாட்டின் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கோசலராமன், கங்கைமைந்தன், குந்திநந்தனன் என்று தாயின் பெயருடனே அழைக்கப்பட்டதன் வழியும் காண்கிறோம். தாய் என்ற சொல்லில் இருந்துதான் தாயம் என்ற சொல் பிறந்தது. தாயம் என்றால் உரிமை என்று பொருள். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே அதாவது தாயே வேட்டையாடுபவளாக இருந்து தன் மக்களை காப்பாற்றி வளர்ப்பவளாகவும், தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தாள். பொருள்சார்ந்த வாழ்க்கை தொடங்கும்போது, நிலவுட...