இலங்கையில் சலேசிய பணிக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தா அமரர் அருட் தந்தை ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்களின் நினைவுகளோடு……………….
இலங்கையில் சலேசிய பணிக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தா அமரர் அருட் தந்தை ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்களின் நினைவுகளோடு ………………. அருட்தந்தை ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்கள் மார்கழி திங்கள் 2 ம் நாள் 1909 இல் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் பிறந்தார் . இவருடைய தந்தையார் ஒரு புகையிரத பொறியியலாளர் இவரே குடும்பத்தின் முதல் வாரிசு . அருட் தந்தை ஹென்றி றெமெறி அவர்கள் தனது ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியை முடித்து ஒரு பொறியியல் பட்டதாரி ஆனார் . அதன் பின்னர் இராணுவ சேவையில் இணைந்து கொண்ட அவர் இராணுவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது சலேசியக்குருவானார் . ஒருவர் அவருக்கு புனித ஜோண் போஸ்கோ பற்றிஅடிக்கடி கூறுவதுண்டு . இளைஞரின் தந்தை ஜோண் போஸ்கோவின் வாழ்வு இவருடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவே தானும் ஒரு சலேசிய குருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இராணுவ அதிகாரி திரு . ஹென்றி றெமெறி அவர்கள் தனது ஆன்மீகக்குருவானவரின் ஆழ்ந்த ஆலோசனையுடன் பிரான்சில் உள்ள அமல உற்பவம் என அழைக்கப்படும் சலேசிய துறவற இல...