இலங்கையில் சலேசிய பணிக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தா அமரர் அருட் தந்தை ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்களின் நினைவுகளோடு……………….
இலங்கையில்
சலேசிய பணிக்கு வித்திட்ட ஆரம்ப
கர்த்தா அமரர் அருட் தந்தை
ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்களின்
நினைவுகளோடு……………….
அருட்தந்தை
ஹென்றி மொறிஸ் றெமெறி அவர்கள்
மார்கழி திங்கள் 2ம் நாள் 1909 இல்
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் பிறந்தார்.
இவருடைய தந்தையார் ஒரு புகையிரத பொறியியலாளர்
இவரே குடும்பத்தின் முதல் வாரிசு.அருட்
தந்தை ஹென்றி றெமெறி அவர்கள்
தனது ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியை முடித்து
ஒரு பொறியியல் பட்டதாரி ஆனார். அதன் பின்னர்
இராணுவ சேவையில் இணைந்து கொண்ட அவர்
இராணுவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது சலேசியக்குருவானார். ஒருவர்
அவருக்கு புனித ஜோண் போஸ்கோ
பற்றிஅடிக்கடி கூறுவதுண்டு. இளைஞரின் தந்தை ஜோண் போஸ்கோவின்
வாழ்வு இவருடைய வாழ்வில் தாக்கத்தை
ஏற்படுத்தவே தானும் ஒரு சலேசிய
குருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட
இராணுவ அதிகாரி திரு.ஹென்றி
றெமெறி அவர்கள் தனது ஆன்மீகக்குருவானவரின்
ஆழ்ந்த ஆலோசனையுடன் பிரான்சில் உள்ள அமல உற்பவம்
என அழைக்கப்படும் சலேசிய துறவற இல்லத்தில்
இணைந்து கொண்டார்.
1935ம்
ஆண்டு புரட்டாதி திங்கள் 13ம்நாள் அருட்தந்தை ஹென்றி
றெமெறி அடிகள் தனது குடும்பத்தினர்
முன்னிலையில் தனது துறவற ஆடையை
அணிந்து கொண்டார். இந்நிகழ்வு பிரான்சிலுள்ள சாண்டிலியன் எனும் இடத்தில் நிகழ்ந்தது.அதன் பின்னர் தனது
நவசன்னியாச கல்வியை தொடர்வதற்காக ஸ்பெயின்
நாட்டிற்கு சென்றார். அப்பொழுது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.மாக்சிஸ கொள்கைகளை எதிர்க்கும்
அனைத்து கத்தோலிக்கர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். சலேசியர்கள்இ சலேசிய கன்னியர்கள்இ .சலேசிய
உடனுழைப்பாளர்கள் என எறக்குறைய 90க்கும்
அதிகமானவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள். அப்பொழுது ஸ்பெயின் சலேசிய மாகாண முதல்வராக
இருந்த அருட்தந்தை. ஜோஸ்கலாசன்ஸ் மார்க்குவி;ஸ் அவர்களும் இந்த
துன்பத்தை சந்திக்க வேண்டியிருந்தது அப்பொழுது அருட்சகோதராக இருந்த ஹென்றி றெமெறி
பிரான்சிய நாட்டவராக இருந்த போதிலும் அவருடைய
வாழ்வும் ஆபத்தில் இருந்தது. ஆகவே அருட்சகோதரர் ஹென்றி
அவர்களை ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளியேறும் படி வேண்டினர். அருட்சகோதரர்
ஒரு சிறிய படகின் மூலம்
பயணித்து அங்கே நடுக்கடலில்
நங்கூரமிட்டிருந்தத
பிரான்சிய நாட்டுக் கப்பலைக் கண்டு தனது படகினை
விட்டு இறங்கி தன்னால் முடியுமான
வரை நீந்தி பிரான்சிய கப்பலில்
ஏறி பிரான்ஸ் நாட்டை அடைந்தார். இவ்வாறாக
கடவுள் அருட்சகோதரர் றெமெறி அவர்களை பாரிய
ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.
ஸ்பெயின்
நாட்டிலிருந்து திரும்பி வந்த அருட்சகோதரர் றெமெறி
தனது நவசன்னியாச பயிற்சியை தனது தாய்நாடான பிரான்சில்
தொடர்ந்தார்.1936ம் ஆண்டு புரட்டாதிதிங்கள்
13ம் நாள் சலேசியராக தனது
முதல் வார்த்தைப்பாட்டினை செய்து கொண்டார். அதன்
பின்; கேன் என அழைக்கப்படும்
லெமோனியர் சலேசிய இல்லத்தில் இயந்திரவியல்
தொழிற்கூட ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இங்கு ஏறக்குறைய இரு
வருடங்கள் பணியாற்றினார் இங்கு பணியாற்றிய காலத்திலேயே
தனது தத்துவவியல் கல்வியினை தனிப்பட்ட ரீதியாக கற்றுக் கொண்டார்.
அடுத்து குருவாக வேண்டியதற்கு அவசியமான
கற்கை நெறியாகிய இறையியல் கல்வியை தொடர்வதற்கு தன்னை
ஆயத்தப்படுத்தி கொண்டிருந்த போது இரண்டாம் உலகப்போர்
மூண்டது. அருட்சகோதரர் றெமெறி அவர்கள் இராணுவத்தில்
சேர்ந்து கொள்ளப்பட்டார் ஏற்கனவே இராணுவ பயிற்சி
பெற்றிருந்தமையால் இராணுவ புலனாய்வுத்துறையின் உயர்
அதிகாரியாக நியமிக்கப்பட்டார். போர் தீவிரமாக நடைபெறும்
பிரதேசங்களில் இவர் பணியாற்றினார். ஜேர்மனியர்கள்
பெல்ஜியம் மற்றும் ஒல்லாந்து நாடுகளில்
தாக்குதல்களை மேற்கொண்டு அதன் பின் சொம்மே
கடல் எல்லையை நோக்கி நகர்ந்து
கொண்டிருந்தனர். அவர் பிரான்சின் வட
பகுதிகளுக்கு வருவதைத் தடுத்து நிறுத்தி பிரான்சியப்படை
ஜேர்மனிய படையுடன் போரிட்டது அவ்வேளை அருட்சகோதரர் றெமெறி
ஜேர்மனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஜேர்மனுக்கு கொண்டு செல்லப்பட்டார். போர்
தீவிரமாக நடைபெற்றுக் கொண்ட இடத்தில் நடந்த
பாரிய குண்டு வெடிப்பினால் அருட்சகோதரர்.றெமெறி தனது வலது
கையின் இரு விரல்களை இழந்தார்.
ஜேர்மனிய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இவர் ஜேர்மனியச் சிறைச்சாலைகளில்
சொல்லெண்ணாத் துன்பங்களை அனுபவித்தார்.
அருட் சகோதரர் றெமெறி அவர்கள்
5 வருட காலமாக ஜேர்மனிய சிறைகளில்
தன் வாழ்வைக் கழித்தார். அவருடன் 6000 க்கும் அதிகமான பிரான்சியர்கள்
சிறைவாழ்வை அனுபவித்தனர். சிறைமுகாம்களில் வாழ்ந்தபோது சிறைச்சாலையின் உள்ளே பிரான்சிய சிறைக்கைதிகள்
அனைவரும் இணைந்து ஒரு பல்கலைக்கழகத்தை
நிறுவினர். அருட்சகேதரர் றெமெறி அவர்களும் அப்பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக கடமையாற்றினார். உலகப் புகழ் பெற்ற
இறையியலாளர் அருட்தந்தை கொங்கர் கல்வியலாளர் ஜீன்
கிறிற்றன் மற்றும் சிலரும் இந்த
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களே. இந்த சிறையில் 30க்கும்
அதிகமான குருமட மாணவர்கள் இருந்தனர்.
அருட்சகோதரர்
றெமெறி 1942ம் ஆண்டு புரட்டாதி
திங்கள் 12ம் நாள் தனது
நித்திய வார்த்தைப் பாட்டினை ஓர் இயேசு சபைக்குருவின்
முன்னிலையில் செய்து கொண்டார். இரு
மறை மாவட்டக் குருக்கள் அவருக்கு சாட்சிகளாக கையெழுத்திட்டனர். இம் மூன்று குருக்களும்
பின்னர் ஆயர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டமை முக்கியமாக குறிப்பிட
வேண்டியஅம்சமாகும.; 5வருடகாலமாக
சிறைவாசம் அனுபவித்த பிரான்சிய சிறைக்கைதிகளுக்கு 1945ம் ஆண்டு சித்திரை
மாதம் ஒரு மறக்க முடியாத
மாதமாகும். ஏனென்றால் இந்த மாதத்தில் தான்
அனைத்து பிரான்சிய சிறைக்கைதிகளும் அமெரிக்க இராணுவப்படையினரால் விடுதலை செய்யப்பட்டனர் 5வருட
சிறைவாசத்தின் பின் அருட்சகோரர் றெமெறி
அவர்கள் பின்சன் (Pசநைசந னந டிiளெழn) எனப்படும் சலேசிய
இல்லத்திற்கு வந்து சேர்ந்தார் அருட்சகோதரருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது
ஏனென்றால் 5வருட காலமாக போதிய
உணவும் சீரிய சுகாதார வசதிகளும்
அவருக்கு கிடைக்கவில்லை ஆனாலும் பிரான்ஸ் சலேசிய
இல்லத்திற்கு வந்த
பின் அவருடைய உடல் நிலையில்
முன்னேற்றம் ஏற்பட்டு பூரண சுகம் பெற்றார்
.
அதன் பின்னர் அருட்சகோதரர் றெமெறி
அவர்கள் அவருடைய இறையியற்கல்வியை தொடர்ந்தார்.
ஆறுமாதங்களின் பின்னர் அருட்சகோதரர் றெமெறி
அவர்கள் 1945ம் ஆண்டு மார்கழி
2ம் நாள் அவருடைய பிறந்ததினத்தன்று
றெய்ம்ஸ் நகரில் திருத்தெண்டராக திருநிலைப்படுத்தப்பட்டு
1945 மார்கழித் திங்கள் 16ம் நாள் அருட்சகோ.றெமெறி அவர்கள் ஒரு
குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் இந் நிகழ்விற்கு அருட்தந்தையின்
தாயும் சகோதரரும் கலந்து சிறப்பித்தனர். இது
பிரான்ஸ் நாட்டில் சாண்டிலியன் நகரில் உள்ள தொழிநுட்பக்
கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அருட்தந்தைக்கு கணிதம் மற்றும் அறிவியலில்
அதிக ஆர்வம் இருந்தது. அங்கு
பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அருட்தந்தை
தனது மாகாணமுதல்வர் அவர்களை சந்தித்து தான்
ஒரு மறைபரப்பு பணியாளராக (ஆளைளழையெசல) விரும்புவதாக தெரிவித்தார். இவருடைய இந்த துணிச்சலான
சேவை மனப்பான்மையுள்ள விருப்பத்தை மகிழ்ச்சியுடன் ஏற்ற மாகாண முதல்வர்
அருட்தந்தை றெமெறி அடிகளாரை மொறோக்கோ
நாட்டிற்கு சேவையாற்ற அனுப்பிவைத்தார் அங்கு இருவருடங்கள் பணியாற்றிய
அருட்தந்தை றெமெறி அவர்களை இந்தியாவுக்கு
சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைத்தனர்.
1949ம்
ஆண்டு தை மாதம் அருட்தந்தை
றெமெறி தென்னிந்தியாவில் உள்ள திருப்பத்தூர் எனும்
இடத்தில் உள்ள சலேசிய இல்லத்திற்கு
வந்து சேர்ந்தார் இங்கு தான் அருட்தந்தை
ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டார் அருட்தந்தை
அவர்கள் வேலூர் திருவெட்டிபுரம் என
பல்வேறுபட்ட இடங்களில் பள்ளிகள்அமைத்து ஏழை இளைஞர்களுக்காக சேவை
செய்தார் காலஞ்சென்ற மதுரைப் பேராயர் மத்தியாஸ்
ஆண்டகை அவர்களுடைய விருப்பிற்கிணங்க அருட்தந்தை றெமெறி பிரான்சிலுள்ள லூர்து
நகருக்கு சென்றார் அங்குமுன்னாள் போர்வீரர்களுக்காக கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அதன்
பின் மீண்டும் இந்தியா வருவதற்கு இந்தியத்
தூதரகம் வீசா வழங்க மறுப்புதெரிவித்தபடியால்
3மாதங்கள் பிரான்சில் செலவழித்தார் அருட்தந்தை மீண்டும் இந்தியா வந்த அடிகளார்
அப்பொழுது சலேசிய மாநில முதல்வராக
இருந்த அருட்தந்தை ஜோஸ் கறேனோ அவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவின் கோவா பிரதேசத்தை (புழய)
நோக்கி பயணித்தார். அங்கே பஞ்சீம் எனப்படும்
பிரதேசத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கான
பாடசாலை ஒன்றை ஆரம்பித்து பணிபுரிந்தார்.
1956ம் ஆண்டு அருட்தந்தை
ஆர்க்கிமிதே பியான்சி அவர்கள் மதுரை சலேசிய
மாகாண முதல்வராக இருந்த போது கொழும்பு
அதி உயர் மறைமாவட்ட ஆயர்
அதி. வண. தோமஸ் கர்தினால்
கூறே அ.ம.தி.
அவர்கள் இலங்கையில் தொழிநூட்பக்கல்லூரி ஒன்றை நிறுவி இளைஞர்களுக்கு
சேவையாற்றுமாறு சலேசியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அருட்
தந்தை ஆர்க்கிமிதே (மதுரை சலேசிய மாநில
முதல்வர்) இப்புதிய பணியை அருட்தந்தை றெமெறி
அவர்களிடம் ஒப்படைத்தார். அருட்தந்தை றெமெறி அடிகளாரும் இவ்
வேண்டுகோளை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இப் புதிய பணியை
ஆரம்பிப்பதற்காக அருட்தந்தை றெமெறி அடிகள் இலங்கையின்
தலைநகரான கொழும்பிற்கு கப்பல் மூலம் வந்து
இறங்கினார். அருட் தந்தை மிகவும்
எளிமையானவர் தனது திருப்புகழ் மாலை
செபப்புத்தகத்துடனும், செபமாலை மற்றும் சில
உடைகளுடனும் இலங்கை வந்து பணியாற்றினார்.
இவை எம் தந்தையின் ஏழ்மையை
எடுத்தியம்புகின்றன. இந்த வேளையில் எமது
சலேசிய சபை ஸ்தாபகரும் இளைஞர்களின்
தந்தையும் ஆன தொன் போஸ்கோவின்
விருப்பம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.
அதாவது 1878ம் ஆண்டு புனித
ஜோன் போஸ்கோ, அருட்தந்தை கலியரோ
அடிகளாரை இலங்கைக்கு அனுப்பி இளைஞர் பணியை
ஆரம்பிப்பதற்காக தீர்மானித்திருந்தார். ஆனாலும் பல்வேறு காரணங்களால்
இக்கனவு நனவாகவில்லை அருட்தந்தை
லூயிஸ் பிச்ச நெல்லி (ஆளைளழையெசல)
அடிகளார் 1878ம் ஆண்டு தொன்
போஸ்கோவை சந்தித்து இலங்கைக்கு தமது சலேசியர்களை அனுப்பி
சலேசிய இளைஞர் பணியினை ஆரம்பிக்குமாறு
தந்தையை வேண்டினார். இவ்வாறாக சலேசியர்களை இலங்கை வந்து பணியாற்றுமாறு
பல்வேறு அழைப்புக்கள் ஆயர்களினாலும், அருட்தந்தையர்களாலும் அனுப்பப்பட்டன. ஆனாலும் கடவுளுடைய திட்டம்
வேறு விதமாக அமைந்திருந்தது. அருளாளர்
தொன் ரூவா உலக சலேசிய
குழுமத்தலைவராக இருந்த போது சலேசியர்களை
1906ம் ஆண்டு இந்தியாவின் தஞ்சாவூருக்கு
அனுப்பி வைத்தார். ஆனாலும் தொன் போஸ்கோவின்
கனவு இலங்கையில் நனவாகியது. 1956ல் ஆகும்.
1956ம் ஆண்டு ஐப்பசி
மாதம் அருட்தந்தை றெமெறி கொழும்புக்கு வந்து
தனது பணியை ஆரம்பித்தார். கொழும்பிற்கு
வந்த அருட்தந்தை றெமெறி சில நாட்கள்
பேராயரின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஆதன்
பின் “பிறின்ஸ் ஒவ் வேல்ஸ்” என
அழைக்கப்படுகின்றன ஒரு இடத்தில் 09 ஏக்கர்
காணித்துண்டு ஒன்றைப் பெற்று சலேசியர்கள்
தங்குவதற்கான இல்லம் ஒன்றை அமைத்தார்.
இதற்கு 1000ஃஸ்ரீ ரூபாய் தேவைப்பட்டது. அத்தொகைப்
பணத்தை தெரிந்த ஒருவரிடம் கடனாகப்
பெற்று வேலையைத் தொடங்கினார். ஒரு வருடத்திற்குள் இக்
கடன் தொகையை மீள செலுத்தினார்.
அவருடன் ஜேர்மனியில் இருந்த அவரது சக
சிறைக்கைதிகள் அவருக்கு உதவி செய்தனர். அருட்தந்தை
றெமெறி அவர்கள் வாங்கிய நிலப்பகுதியில்
தான் தற்போதைய சுகததாச விளையாட்டு மைதானம்
அமைந்து இருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டிய
விடயமாகும். அருட்தந்தைக்கு உதவியாக இங்கிலாந்து நாட்டைச்
சேர்ந்த அருட்சகோதரர் றெஜினோல்ட் விக்கின்ஸன் அவர்கள் சிறிது காலம்
தந்தையுடன் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து இலங்கையின் முதற் சலேசிய அருட்
சகோதரர் செலஸ்ரின் அவர்களும் சிறிது காலம் தந்தையுடன்
பணியாற்றினார். அருட்தந்தை
றெமெறி அவர்களின் அயராத முயற்சியினால் ஒரு
சிறிய தொழிநுட்ப தொழிற்கல்வி பாடசலையும் சலேசியர்களின் விடுதியும்அமைக்கப்பட்டது.
அப்பொழுது கொழும்பு மாநகரசபை முதல்வராக இருந்த திரு. சுகததாச
அவர்கள் அருட்தந்தை பாடசலை அமைத்திருந்த 9 ஏக்கர்
காணியை நகரசபைக்கு விற்பனை செய்யுமாறும் ஏனென்றால்
விளையாட்டு மைதானத்தை விஸ்தரிக்க இக்காணி தேவைப்படுவதாகவும் கூறி
அருட்தந்தைக்கு தொல்லைகள் பல கொடுத்தார். அது
மட்டுமல்லாது பௌத்த அமைப்புக்கள் சிலவும்
அருட்தந்தையின் பணியை எதிர்த்தன. ஆகவே
அருட்தந்தை றெமெறி அந்தக்காணியையும் கட்டிடத்தையும்
கொழும்பு மாநகர சபைக்கு மீண்டும்
விற்பனை செய்துவிட்டு வேறொரு இடத்தில் தன்
பணியை ஆரம்பிக்க தீர்மானித்தார். அப்பொழுது கொழும்பு
மறைமாவட்ட பேராயர் தோமஸ் கர்தினால்
கூறே ஆண்டகை அவர்கள் கடற்கரைத்தெரு
பங்கிற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தினை தந்தை
அவர்களுக்கு கொடுத்தார் இது ஏத்துக்கால் எனும்
பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதி விரியன் பாம்புகள் அதிகம்
காணப்படும். பயங்கரமான பிரதேசமாக இருந்தது.
விரியன்
பாம்புகள்; கொல்லப்படுகின்ற ஒவ்வொரு முறையும் அந்த
சலேசிய இல்ல குருமட மாணவர்கள்
அருள் நிறைந்த மரியாயே என்ற
செபத்தினை சொல்வது வழக்கமாக இருந்தது.
இப்பகுதியைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு
ஏழை இளைஞர்களுக்கான பணிபற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை இந்தப்
பிரதேசத்தை தங்கள் சுய தேவைகளுக்காக
பயன்படுத்தி வந்ததனால் அவர்கள் இக்காணியை மற்றவர்களுக்கு
கொடுக்க விரும்பவில்லை.
அருட்தந்தை
றெமெறி அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரு
பௌத்த மதத்தைச்சார்ந்த திரு.சிறில் எனப்படும்
தச்சுத்தொழிலாளர் நீர்கொழும்பு தொன்போஸ்கோ தொழிநுட்ப கல்லூரியை கட்டியெழுப்பினார். 1958ம் ஆண்டு காலப்பகுதிகளில்
அருட்தந்தை றெமெறி கொழும்பில் பணியாற்றிய
போது செல்வன் கிறிஸ்ரி பெர்னாண்டோ அருட்தந்தையுடன்
இணைந்து பணியாற்றினார். இவரே இலங்கையின் முதல்
சலேசியராகி பின்னர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அவர் தான் எமது இலங்கை
வாழ் சலேசியர்களால் அதிகமாக நேசிக்கப்படும்
அமரர் அருட்தந்தை கிறிஸ்ரி பெர்னாண்டோ அவர்கள் ஆவார். அருட்தந்தை
றெமெறி அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அருட்பணி இம்மானுவேல்
ஜான்ஸ் (இலங்கையின் முதற்சலேசியக்குரு) அருட்பணி ஸ்ரனிஸ்லாஸ் பீரீஸ் அருட்பணி பேர்னாட்
லூசியன் பிரனாந்து அருட்பணி அந்தோனி பின்ரோ (முன்னாள்
இலங்கை சலேசிய உப மாகாண
முதல்வர்) அருட்பணி டிக்ஸன் பிரனாந்து ஆகியோர்
சலேசிய குருக்களாக உருவாக்கினார்கள் நீர்கொழும்பு ஏத்துக்காலயில் உள்ள
சலேசிய இல்லத்தின் கட்டிடவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அருட்தந்தை றெமெறி
அவர்களும் அவருடன் இந்த குருமட
மாணவர்களும் ஏத்துக்கால பங்குப்பணியகத்தில் தங்கிஇருந்தார்கள். 1962ம் ஆண்டு கார்த்திகை
மாதம் 1ம் திகதி அனைத்து
புனிதர்களின் திருநாள் என்பது இலங்கை வாழ்
மக்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உன்னதநாளாகும். இந்த
நாளில் தான் சலேசியர்களுடைய
இளைஞர் பணிக்கு அடித்தளமிடப்பட்டது. அதாவது
நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் தொன்போஸ்கோ இளைஞர் பணிநிலையம் உத்தியோக
பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அருட்தந்தை
றெமெறி அடிகள் எங்கெல்லாம் பணியாற்ற
சென்றாரோ அங்கெல்லாம் பாடசாலைகளை நிறுவி பணி செய்தார்.
ஆனால் இலங்கையில் மட்டும் சற்று வித்தியாசமாக
முதல் முதலாக குருமடத்தை ஆரம்பித்து
பணிசெய்தார். ஏனென்றால் சலேசிய பணியை தொடந்து
ஆற்றுவதற்கு தேவையான உள்நாட்டு சலேசியர்களை
இலங்கையில் உருவாக்குவதற்காகவே ஆகும். அதுமட்டுமல்லாமல் இளைஞர்
பணிமன்றம் புனித பேருவானவர் ஜெபக்கூடம்
(ழசயவழசல) 200 மாணவர்களை உள்வாங்கக்கூடிய ஒரு மாபெரும் தொழிற்பயிற்சி
நிலையத்தையும் தந்தை அவர்கள் ஆரம்பித்தார்.
இங்கே வீட்டு மின் இணைப்பு
உலோக வார்ப்புத்தொழில் தச்சுவேலை என பல கற்கை
நெறிகள் நடாத்தப் பட்டன. அருட்தந்தை அவர்கள்
வயலின் மற்றும் ஓகண் வாத்தியங்கள்
வாசிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்.
அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சிறந்த
கணித ஆசானும் கூட ஆகவே
ஒவ்வொரு சனிக்கிழமையும் கணித வகுப்புக்கள் நடத்தி
குருமட மாணவர்களை கல்வியில் செழித்தோங்க வழிசமைத்தார். இவர் ஒரு சிறந்த
பொறியியலாளர் குருமடம் தொழிற்பயிற்சிக்கூடம் எல்லாவற்றிற்கும் இவரே வரை படங்கள்
தயாரித்தார்.
அப்பொழுது
மதுரை சலேசிய மாநில முதல்வராக
இருந்த அருட்தந்தை மெட் அடிகளார் அவருடைய
உதவி முதல்வராக இருந்த அருட்தந்தை லூய்ஜி
டீ பியோரே அடிகளாரை இலங்கைக்கு
அனுப்பி இலங்கையில் சலேசிய பணிகளை இடைநிறுத்தம்
செய்யுமாறு ஆணை பிறப்பித்தார். ஏனென்றால்
இலங்கை சலேசிய பணிகளில் அவர்கள்
பெரிதாக வளர்ச்சி ஒன்றையும் காணவில்லை. அத்துடன் ஒரே ஒரு சலேசிய
குரு (அருட்பணி றெமெறி அடிகள்) மட்டுமே
இலங்கையில் பணி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் இலங்கை வந்த மதுரை
மாநில உபமுதல்வருக்கோ மிகுந்த ஆச்சரியம் தனி
ஒரு சலேசியராக இருந்து கொண்டு மிகவும்
சிறந்த முறையில் இளைஞர் பணிகளை முன்னெடுத்து
நடத்தினார் அருட்தந்தை றெமெறி. குருமட மாணவர்கள்
தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் சந்தித்த மதுரை சலேசிய மாநில
உதவி முதல்வர் 1970ம் ஆண்டு இலங்கையில்
உத்தியோக பூர்வமாக சலேசிய குழுமத்தை உருவாக்க
அங்கிகாரம் வழங்கினார். அருட்தந்தை றெமெறி அவர்களுக்கு கிடைத்த
வெற்றியாக இதனை கருதலாம். அருட்பணி
றெமெறி அவர்கள் மிகவும் அன்பானவர்.
பணிசெய்வதையே குறிக்கோளாக கொண்டவர். மாணவர்கள் சில வேளைகளில் கால்பந்து
விளையாடிக் காயப்படும் போது மருத்துவமனைக்கு அழைத்து
சென்று அவர்களை அன்புடன் பராமரிப்பார்.
அருட் தந்தை றெமெறி எளிமையானவர்.
மிகவும் சாதாரணமாகவே வாழ்ந்தார். வுசதிகளற்;ற அந்த சூழ்நிலையில்
அவருக்கு வசதியாக இருந்து ஒரு
இரும்புக்கட்டில் மாத்திரமே. தொழிற் பயிற்சி நிலைய
விறாந்தை தான் இவருடைய படுக்கையறை.
மழை காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்தித்தார்.
இப்படியாக மிகவும் ஏழ்மை நிறைந்த
வாழ்வு நடத்தினார். ஏ
ம் அருட்தந்தை றெமெறி அடிகள். 1969ம்
ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு அருட்தந்தை
ஏழை இளைஞர்களுக்கு ஆற்றிய சேவையை பாராட்டும்
முகமாக தேசிய விருது ஒன்றை
வழங்கி கௌரவித்தது. இவ்வைபவம் கொழும்பிலுள்ள பிரான்சிய தூதரகத்தில் இடம் பெற்றது. அதன்
போது அருட் தந்தை றெமெறி
அவர்கள் “எனக்கு எனது நாட்டினால்
கிடைத்த இந்த கௌரவத்தையும் பெருமையையும்
எனது பணிக்கு உறுதுணையாய் இருந்து
உதவி செய்த அனைத்து இலங்கையர்களுடனும்
பகிர்ந்து கொள்கின்றேன் என்று அடக்கமாக கூறினார்”
திரு.சிறில் பந்துல மற்றும்
திரு.மார்க்கஸ் பெர்னாண்டோபுள்ளே
இருவரும் தந்தையுடன் இணைந்து பற்பல வேலைகளை
செய்தனர்.
ஓவ்வொரு
வருடமும் அருட்தந்தை தனது சொந்த நாடான
பிரான்சு நாட்டிற்கு செல்வதுண்டு. அங்கு சென்று தனக்கு
தெரிந்த நன்கொடையாளார்களின் உதவியுடன் தொழிற்
பயிற்சி நிலையத்திற்கான இயந்திரங்கள் குருமடத்திற்கு தேவையான பொருட்கள் என
பல பொருட்களை கொண்டு வருவது வழக்கமாக
இருந்தது. இப்படியாக 1962 இல் இருந்து 1972 காலப்பகுதிவரை
நீர்கொழும்பு தொன்போஸ்கோ இல்லத்தின் இல்லத்தந்தையாக கடைமையாற்றினார். ஆதன் பின்னர் அவருடைய
உடல் நலம் குன்றத் தொடங்கியது.
அவர் மிகவும் சோர்ந்து போய்
நோயாளியாக மாறினார். எனவே அவருடைய வைத்தியர்கள்
பிரான்சு நாட்டிற்கு போவதுதான் சிறந்தது என அறிவுரை வழங்கினார்கள்.
ஆத்துடன் விமான பயணங்கள் , கடல்
மார்க்க பயணங்கள் தந்தையின் உடல் நலத்திற்கு உகந்தவையல்ல
என அறிவுரை வழங்கினர். அவர்
அந்த அறிவுரையை ஏற்று பிரான்சு நாட்டிலேயே
தங்கியிருந்தார். அங்கே சலேசிய அருட்
சகோதரிகளின் ஆன்மீகக்குருவாக இருந்து பல பணிகள்
செய்தார். ஆத்துடன் பிரான்சில் இருந்து கொண்டு இலங்கை
சலேசிய இளைஞர் பணிக்காக நிதி
திரட்டும் அரும் பணியினை அயராது
செய்து வந்தார் எம் தந்தை
இப்படியாக பணியாற்றிக்
கொண்டிருக்கையில் தந்தையின் உடல் நிலை மோசமடைந்து
வந்தனால் அவரை ரவுலோன் என
அழைக்கப்படும் வயோதிப சலேசியர்களை பாரமரிக்கும்
இடத்திற்கு கொண்டு சென்றனர். 2000 ம்
ஆண்டு ஐப்பசி மாதம் 24ம்
திகதி தனது 81 வயதில் அருட்தந்தை
ஹென்றி மொறிஸ் றெமெறி அடிகள்
இறைவனடி சேர்ந்தார்.
பிரான்சிலிருந்து
புறப்பட்டு வந்த புரட்சியாளனே உனது
இடைவிடாத சலேசிய புரட்சியால் இன்று
எம் இலங்கை சலேசிய உப
மாகாணம் இளைஞர் பணியில் நிமிர்ந்து
நிற்கின்றது “நித்திய இளைப்பாற்றியை அவருக்கு
அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி அவர் மேல்
ஒளிர்வதாக – ஆமென்
எழுத்துருவாக்கம் : அருட்பணி.
டிக்சன் பறுனாந்து ச.ச
தமிழாக்கம் : அருட் சகோதரர்
அ.அன்ரன் ஞானராஜ்
றெவல் ச.ச
Comments
Post a Comment