✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠  (St. Francis Xavier)

மறைப் பணியாளர்: தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர்:

பிறப்பு : ஏப்ரல் 7, 1506  ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்) (Javier, Kingdom of Navarre (Present Spain)

இறப்பு: டிசம்பர் 3, 1552 (வயது 46) 'சாவோ ஜோவாஓ' தீவு, (தற்போதைய சீனா) (São João Island (Now China)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
லூதரனிய திருச்சபை (Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

அருளாளர் பட்டம்: 25 அக்டோபர் 1619 திருத்தந்தை ஐந்தாம் பவுல்

புனிதர் பட்டம்: 12 மார்ச் 1622 திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி

நினைவுத் திருவிழா: டிசம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை:  நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர், எரியும் இதயம்

பாதுகாவல்:
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா.
புனித ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

கல்வி:
1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.

"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும்: சவேரியாரின் பயணங்கள்:

இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

புனித சவேரியார் 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.

மறைப்பணி:
1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.

கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார்.

புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“They called me great king, but hereafter for ever they will call you the Great Father” என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம்:
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம் டிசம்பர் 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல்:

சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு:

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.                      
[02:21, 12/3/2016]: Happy feast to all by the name of FRANCIS XAVIER


மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 03) - தூய சவேரியார் விழா
தற்போது தமிழகத்தின் கடைகோடியிலுள்ள கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் பேராலயம் புனிதராலேயே நிறுவப்பட்டது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூறுகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்வு. அந்த ஆலயம் கட்ட தூய சவேரியார் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரிடம் இடம் கேட்டபோது அவர், “அதெல்லாம் முடியாது” என்று மறுத்துவிட்டார். தூய சவேரியார் மீண்டுமாக அவரிடம், “எனக்கு ஓர் ஆட்டுத் தோல் அளவுக்கு இடம்கொடுத்தால் போதும், நான் அதில் ஆலயம் கட்டிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஓர் ஆட்டுத்தோலைக் காட்டினார். அதைப் பார்த்த மன்னர், இந்த ஆட்டுத்தோல் எவ்வளவு இடம் பிடித்துவிடப் போகிறது என்று எண்ணி, அதற்கு சரி என சம்மதம் தெரிவித்தார்.
அதன்பிறகு தூய சவேரியார் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆட்டுத்தோலை கீழே விரித்தார். அந்த ஆட்டுத்தோலானது ஏற்கனவே இருந்த அளவைவிட விரிந்துகொண்டே சென்றது. இதைப்பார்த்து திருவிதாங்கூர் மனனர் தூய சவேரியார் சாதாரண மனிதர் அல்ல, அவர் இறைவனுடைய அடியார் என்பதை உணர்ந்து ஆலயம் கட்ட போதுமான இடம் தந்தார். இதன் நிகழ்வுக்குப் பிறகு மன்னர் தூய சவேரியாரின் நண்பரானார். அதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாற இருந்த தடையும் நீக்கனார்.
தூய சவேரியார் எப்படி இறைவனின் கையில் வல்லமையுள்ள புனிதராக விளங்கினார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆம், இன்று திருச்சபையானது இந்திய நாட்டின் திருத்தூதரும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலருமான தூய பிரான்சிஸ்கு சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைக்கு நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொன்னால் அது தூய சவேரியால் ஆற்றிய பணியினால்தான் என்று சொன்னால் அது மிகையாது.
இந்த நல்ல நாளிலே தூய சவரியாரின் வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூய சவேரியார் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525 ஆம் ஆண்டு, உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அங்கே மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530 ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில்தான், "நான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்' என்ற ஆசை கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக்கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.
ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை- அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541 ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். அங்கே சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக்கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.
பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.
மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்குச் சென்று இறை பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கொச்சியிலும், கோவையிலும் சேவை செய்தார். மீண்டும் 1545-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.
சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, "ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.
இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது. ஆம் தூய சவேரியாரின் உடலில் எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை.
1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது.
தூய சவேரியாரின் வாழ்வை ஆழ்ந்து உற்று நோக்கும்போது நாம் கண்டுகொள்ளக்கூடிய ஓர் ஆழமான உண்மை அவரிடம் இருந்த நற்செய்தி அறிவிற்கான தாகம்தான். அறியாத இடத்தில், புரியாத மொழி பேசும் மக்கள் மத்தியில் அவர் ஆற்றிய நற்செய்திப் பணி இன்றைக்கும் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. எனவே அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க முன்வரவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கும் அழைப்பும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவை இன்னும் அறியாத மக்களுக்கு அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க முன்வருவோம். அப்படி நற்செய்தியை அறிவிக்கும்போது அது நம்முடைய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். (முதல்வாசகம்)
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொருநாளும் அவ்வூரில் இருந்த மருத்தவமனைக்குச் சென்று, அங்கே இருந்த நோயாளிகளுக்கு விவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை வாசித்துக்காட்டி, விளக்கம் அளித்து வந்தார். பெரியவருடைய இந்த நற்செய்தி அறிவிப்புப் பணி அங்கிருந்த நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
நாட்கள் செல்ல செல்ல அவருக்கு கண்பார்வை மங்கியது. அப்போது அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர் அவரிடம், “நீங்கள் நீண்ட நேரம் எதையும் கூர்ந்து படிக்கவேண்டாம்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவர் தனக்கு கண்பார்வை மங்கியபோதும் தன்னால் முடிந்த அளவுக்கு விவிலியத்தில் இருக்கும் சில முக்கியமான பகுதிகளை மனப்பாடம் செய்தார்.
தனக்கு கண்பார்வை முற்றிலுமாக போனபோதும் ஒவ்வொருநாளும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தான் மனப்பாடம் செய்த பகுதிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நற்செய்திப் பணி செய்தார். இவ்வாறு அந்த பெரியவர் தான் இறக்கும்வரைக்கும் நற்செய்திப் பணியை தொடர்ந்து ஆற்றி நற்செய்திப் பணியாளராக வாழ்ந்தார்.
நாம் எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும், அது முடியாவிட்டால் குறைந்தது நாம் இருக்கும் இடத்திலாவது நற்செய்தியை அறிவிப்போம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
ஆகவே தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரை நமக்குக் கொடையாகக் கொடுத்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் அவரைப் போன்று நாமும் இயேசுவை பற்றி நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். - - Fr Palay Mariaantonyraj. 2016
சிந்தனை
இறுதி நாளில் நம்முடைய உடல் உள்ளம், ஆவி, ஆன்மா இந்த நான்கையும் குற்றமில்லாத நிலையில் ஒப்புக் கொடுத்திட வேண்டும் என்கின்ற அழைப்பை பெறுகின்றோம். 01 தெச 05: 23
ஆன்மாவை இழந்தால் அதனால் என்ன பயன்?
வறுமையை போக்க வளமையை சேர்க்க, இன்றைக்கு பொருள் ஈட்ட பல முனைப்பான வழிகளை தேட தெரிந்த மனிதன், இன்றையக் காலக்கட்டத்தில் ஆன்ம வறுமையோடு வாழ்ந்து வருவதாலேயே, தெய்வபயமின்றி வாழ முற்படுகின்றான். இதுவே அவனை நோயாளியாக்குகின்றது. இந்த ஆன்ம வறுமையை போக்க அருமருந்தாகிய நற்கருணையை வாய்ப்புள்ள போதெல்லாம் பெற்றுக் கொள்வதோடு, செப வாழ்வு நம்முடையதாகும் போது ஆன்மா வளமாகும்.
மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 03) - தூய சவேரியார் விழா
சவேரியார் இந்திய நாட்டில் கடலோரக் கிராமங்களில் உள்ள ஓர் ஊரில் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது அவ்வூரைச் சுற்றி அரபு நாடுகளைச் சேர்ந்த கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டு சூறையாடத் தொடங்கினார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் கடற்கரைக் கிராமங்களில் எப்போதும் நடக்கும் ஆதலால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அஞ்சி நடுங்கி சவேரியாரிடம் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது அவர் மக்களைப் பார்த்து, “நீங்கள் யாருக்கும் அஞ்சவேண்டாம், கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று சொல்லிவிட்டு அவர் நற்செய்தி போதித்துக்கொண்டிருந்த ஆலயத்தை விட்டு வெளியே வந்தார்.
ஊரையே சூறையாட நினைத்த கொள்ளையர்களை சவேரியார் ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான் எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதைப் பார்த்து வியப்படைந்த மக்கள் யாவரும் இவர் உண்மையிலேயே இறைவனின் ஊழியன் என்று கடவுளை வாழ்த்தினர்.
அன்னையாம் திருச்சபை இன்று மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலரும், நம் இந்திய நாட்டின் பாதுகாவலருமான தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவருடைய வாழும், இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்களும் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறிது அறிந்துகொள்வோம். சவேரியார் ஸ்பெயின் நாட்டில் 1506 ஆம் சவேரியார்கோட்டை என்ற இடத்தில் ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தை மூன்றாம் ஜான் என்ற மன்னனின் அரசபையில் ஆளுநராக இருந்தார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த சவேரியார் தாய் மற்றும் சகோதரிகளின் பராமரிப்பிலே வளர்ந்தார். 1525 ஆம் ஆண்டில் தன்னுடைய மேல்படிப்பை பாரிசில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்தார். இவருடைய அறைவாசிகள்தான் பேதுரு ஃபேபர் மற்றும் இஞ்ஞாசியார். சவேரியார் ஒருமிகப் பெரிய பேராசிரியராக மாறவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு இருந்தார். அவர் இப்படி உலகக் காரியங்களில் அதிகமான ஈடுபாடுகொண்டு வாழ்வதைப்பார்த்த இஞ்ஞாசியார் “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் வரும் பயனென்ன?” (மத் 16:26) என்ற இயேசுவின் வார்த்தையை திரும்பத் திரும்ப அவரிடம் சொல்லி வந்தார். இது சவேரியாரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1534 ஆம் ஆண்டு ஏழு உறுப்பினர்களைக் கொண்டு உருவான ‘இயேசு சபை”யில் சவேரியார் ஒரு முக்கிய நபராக விளங்கினார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் குருப்பட்டம் பெற்ற சவேரியார், ரோம் நகரில் ஓராண்டு காலம் நோயாளிகளிடம் பணிசெய்துவிட்டு, கிழக்காசிய நாடுகளுக்கு போதிய அருட்பணியாளர்கள் இல்லாததனால் 1542 ஆம் ஆண்டு பணிசெய்வதற்காக கோவாவில் இறங்கினார்.
அங்கே பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்று இருந்தவர்களுக்கு திருச்சபையின் அடிப்படைச் ஜெபங்களைச் சொல்லிக்கொடுத்தார்; அதற்காக மக்களின் மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒருசிறிய மணியை எடுத்துக்கொண்டு அதனை தெருவில் அடித்துக்கொண்டேபோய் சிறுவர்களைக் கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்தார். அத்தோடு நின்றுவிடாமல் மக்களுக்கு மருத்துவப் பணியும் செய்துவந்தார்.
ஒருமுறை சவேரியார் இஞ்ஞாசியாருக்கு கடிதம் எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார், “இங்கே இருக்கும் மக்களுக்கு அடிப்படைச் ஜெபங்கள்கூடத் தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு ஜெபங்களை எல்லாம் சொல்லித் தருகிறேன். மேலும் இம்மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்துக் கொடுத்து என்னுடைய கைகளே மரத்துப் போய்விட்டது” என்று எழுதினார். அந்தளவுக்கு நற்செய்திப் பணியை மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.
ஒருநாள் ஒரு குடும்பஸ்தன் சவேரியாரை அணுகி வந்து தனக்கு பிறப்பதெல்லாம் பென்குழந்தைகளாகப் பிறக்கிறது, ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று கேட்டபோது அவர் அவருக்காகச் ஜெபித்தார். அடுத்த ஆண்டில் அவருடைய மனைவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தளவுக்கு சவேரியார் கடவுளின் அருளை நிரம்பப் பெற்றிருந்தார். பாம்பு கடித்து இறந்தவரையும், கிணற்றில் விழுந்து இறந்தவரையும் சவேரியார் உயிர்ப்பித்தார் என்று இவரது வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது.
சவேரியார் இந்தியாவின் கடற்கரை பகுதியில் நற்செய்தி அறிவித்துவிட்டு மலாக்கா மற்றும் ஜப்பானிலும் நற்செய்திப் பணியாற்றினார். அங்கே இறந்துபோன ஒரு பிரபுவின் மகளை உயிர்ப்பிக்கச் செய்தார். அதனால் மக்கள் அவரை ‘வெள்ளை உடை தரித்த புத்தராகவே’ பார்த்தனர். ஜப்பானில் நற்செய்தி அறிவித்தபோது மக்களிடமிருந்து ஒரு சில பிரச்சனைகளைச் சந்தித்தார். அதனால் அவர் அங்கிருந்து சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கப்ப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்போது சான்சியன் என்ற தீவிலே கொடிய காய்ச்சல் தாக்க சவேரியார் தன்னுடைய 46 வது அகவையில் இறந்துபோனார்.
வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து; பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து; தாம் சந்தித்த மக்களுக்கெல்லாம் நற்செய்தி அறிவித்து; மக்களை ஆண்டவரிடம் அழைத்துச் சென்ற தூய சவேரியாரைப் போன்று இன்று நற்செய்திப் பணிசெய்ய ஆளில்லை. தூய சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடம் விளங்கிய நற்செய்தியின் மீதான ஆர்வம், பற்று எல்லாம் நம்மிடம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்ற பவுலடியாரின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் தூய சவேரியாரைப் போன்று நற்செய்தியாளராக மாறவேண்டும்.
ஒருமுறை அரசன் ஒருவன் தன்னுடைய நாட்டு மக்கள் எந்தளவுக்கு சமூக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சோதித்து பார்க்க விரும்பினார். அதனால் மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுவிட்டு, அதனை யார் அகற்றுகிறார்கள் என்று பார்க்குமாறு தன்னுடைய மந்திரிக்கு கட்டளையிட்டான்.
அதேபோன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையில் ஒரு பாறாங்கல் போடப்பட்டது. அதைப் பார்த்த மக்களில் ஒருசிலர் ஒன்றுமே அறியாதவர்கள் போன்று விலகிச் சென்றார்கள். இன்னும் ஒருசிலர் ‘சாலையில் இப்படி பாறாங்கல் கிடப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் அரசன் அப்படி என்ன செய்கிறார்’ என்று அரசனை இகழ்ந்து பேசிக்கொண்டே சென்றனர்.
அப்போது அந்த வழியாக தலையில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு சந்தைக்குச் செல்வதற்காக ஒரு விவசாயி வந்தார். பாதையின் குறுக்கே இப்படி பாறாங்கல் கிடப்பதைப் பார்த்த அவர் தன்னுடைய தலையில் இருந்த சுமையை இறக்கிவைத்துவிட்டு பாறாங்கல்லை பாதையில் இருந்து அப்புறப்படுத்தினார். அவ்வேளையில் பாறாங்கல்லுகுக் கீழே ஒரு துணிப்பை கிடந்தது. அதைத் திறந்து பார்த்தவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் அந்தப் பை முழுவதும் பொற்காசுகள். அந்தப் பையில் ஒரு காகிதமும் இருந்தது அதில் இவ்வாறு எழுதி இருந்தது, “இந்த கல்லை அகற்றுவோருக்கே இந்த பொற்காசுகள்” என்று. கல்லை அகற்றிய எனக்கு இவ்வளவு பொற்காசுகள் தந்திருக்கிறார் அரசர் என்று மிகவும் மகிழ்ச்சியோடு சந்தையை நோக்கிப் புறப்பட்டார்.
பாதையில் கிடந்த கல்லை யாரும் அகற்ற முன்வராதபோது ஒரு சாதாரண விவசாயி அதனை அகற்ற முன்வந்தார். அதனால் அவர் பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றார். அதேபோன்றுதான் உலகப் போக்கில் வாழ்ந்து யாருமே நற்செய்தி அறிவிக்க முன்வராத சூழலில் தூய சவேரியார் நற்செய்தி அறிவிக்க முன்வந்ததார். அதனால்தான் கடவுள் அவருடைய உடலை இன்று வரைக்கும் அழியாமல் காத்து வருகின்றார்.
நாமும் இன்றைய நற்செய்தியில் படிப்பது போன்று ‘உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கும்’ நற்செய்திப் பணியாளர் ஆவோம். தூய சவேரியாரைப் போன்று இறையருளை நிறைவாய் பெறுவோம். - Fr Palay Mariaantony. 2015
GOSPEL READING: MARK 16:15-20
The disciples are sent into the world to proclaim the gospel. Gospel is to be proclaimed to every creature. Many details are given about the way in which the gospel is to be spread throughout the world. There are also references to the miraculous signs that the disciples will perform.
This passage speaks about discipleship. This also speaks about the commission by the risen Lord. Proclamation should be received with faith. Only believers will receive the message and this will lead to baptism and those who are baptized will be saved. Proclamation is essential for salvation.
சீடர்களுக்கு கொடுக்கப்படுகிற பணி நற்செய்தியைப் பறைசாற்றுதலே. நற்செய்தியைப் பறைசாற்றுதல் வழியாக விசுவசிப்போருக்கு திருமுழுக்கு கிடைக்கிறது@ திருமுழுக்கு வழியாக மீட்பும் கிடைக்கிறது. மீட்புக்கு பறைசாற்றுதல் இன்றியமையாததாகிறது. Fr. Theo SDB

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath