Posts

தூய தொன் போஸ்கோவின் பேரில் ஆர்ப்பரிப்பு

Image
  தூய தொன் போஸ்கோவின் பேரில் ஆர்ப்பரிப்பு ( திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொரூப ஆசீருக்கு முன் பாடுவது)   சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும்   தூய தொன் போஸ்கோ முனிந்திரரே சகல இளையோர்களின் பாதுகாவலரே எம் இளையோர்களின் நல்வாழ்விற்காக இறைவனை மன்றாடும்.   விண்ணுலகில் இருக்கிற .......... (இளையோர் வாழ்வு சிறக்க மன்றாடுதல்)   சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும்   தூரின் நகர புதுமலரே வாடி வந்தவரை வாழ வைக்கும் வள்ளலே உமை நாடி வந்திருக்கும் எமக்காக இயேசுவை மன்றாடும்.   அருள் நிறைந்த   ........... (பிரதேச மக்களின் தொழிற்துறை சிறக்க மன்றாடுதல்.)   சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும். அர்ச்சியஷ்டரான தூய ஜோண் போஸ்கோவே சலேசிய சபையின் ஆரம்பமே எங்கள் சலேசிய குடும்பத்திற்காக இறைவனை மன்றாடும்.   அருள் நிறைந்த .......... (எமது சலேசிய குருக்கள் , சகோதரர்கள் , சலேசிய அருட்சகோதரிகள் , சலேசிய குடும்பத்தவர்கள்     ஆக்கியோன் - அருட்பணி . அ . அன்ரன் ஞானராஜ் றெவ்வல் ...

மூவொரு இறைவன் பெருவிழா

மூவொரு கடவுள் - year 2 மறையுரைச் சிந்தனை மூவொரு இறைவன் பெருவிழா ‘உலக முடிவுவரை எந்நாளும் நம்மோடு இருக்கும் மூவொரு இறைவன்! ஒருமுறை ஒரு நகரப் பங்கில் உறுதிபூசுதல் கொடுப்பதற்காக ஆயர் அவர்கள் சென்றிருந்தார்கள். வழிபாட்டின்போது ஆயர், பின்வரிசையில் உறுதிபூசுதல் பெற இருந்த சிறுமி ஒருத்தியிடம், “மூவொரு கடவுள் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார்” என்று  பதிலைச் சொன்னாள். ஆனால், சிறுமி சொன்னது ஆயரின் காதில் சரியாக விழாமல் போகவே, அவர் மீண்டுமாக அந்தச் சிறுமியிடம், “நீ சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. மீண்டுமாக அதைச் சொல்” என்றார். சிறுமியோ, “மூவொரு கடவுளைப் பற்றி முழுமையாக விளக்கமுடியாது, அது ஒரு மறைபொருள். அதை அப்படியேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னதும், ஆயர் மிகவும் ஆச்சரியப்பட்டுபோய், அந்தச் சிறுமியை வாழ்த்தினார். ஆம், ‘மூவொரு இறைவன்’ என்பது ஒரு மறைபொருள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒழிய, அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். இன்று நாம் மூவொரு கடவுளது பெருவிழாக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில் இப்பெருவி...

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு Year 2

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு  (திப 9: 26 -31 ; 1 யோவா 3: 18 -24 ; யோவா 15: 1-8) இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்! டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி. அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்று எழுதி வைத்தார்கள். இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள். குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்க...

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு Year 2

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு Year 2 (திப 10:25-26, 34-35, 44-48; 1 யோவா 4:7-10 ; யோவா 15: 9-17) “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ளுங்கள்” ஒபேரா நடனத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் எர்னஸ்டைன் ஸ்கூமென் (Ernestine Schumann) அவருடைய கலையுலகின் தொடக்க காலகட்டத்தில் அவரது கணவர் அவரைவிட்டுப் பிரிந்துபோனார். இதனால் அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுப்பட்டார். கையில் ஒரு பைசாகூட இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய வாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என அவர் தீர்மானித்தார். எனவே அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துகொண்டு தண்டவாளத்தில் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தாள். அப்போது எர்னஸ்டைன் ஸ்கூமெனின் மகள்களில் ஒருத்தி, “அம்மா! நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார். இக்கட்டான அந்த சூழ்நிலையில் மகளின் குரல் கடவுளின் குரலை போன்று அவருக்குக் கேட்டது. இதனால் அவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். ஒருசில ஆண...

விண்ணேற்றப் பெருவிழா (Year 2)

விண்ணேற்றப் பெருவிழா (Year 2) (திப 1:1-11 ; எபே 4: 1-13 ; மாற் 16: 15-20) விண்ணேறிச் சென்று, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இயேசு! ஒரு சமயம் பிரபல மறைபோதகரான பில்லி கிரகாம் (Billy Graham) ஒரு நகருக்கு போதிக்கச் சென்றார். அவ்வாறு அவர் போதிக்கச் சென்றபோது உடனடியாக அனுப்பவேண்டிய ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக அந்நகரில் இருந்த அஞ்சல் நிலையத்தை நீண்ட நேரமாகத் தேடினார். எவ்வளவுதான் அவர் கடுமையாகத் தேடினாலும் அவரால் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அந்த வழியாக ஓர் இளைஞன் வந்தான். அவனை நிறுத்திய பில்லி கிரகாம், “இந்த நகரில் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது?” என்று கேட்டார். அவனும் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று மிகத் தெளிவாக சுட்டிக்கட்டினான். அவன் அஞ்சல் நிலையம் எங்கிருக்கின்றது என்று சரியாகச் சுட்டிக்காட்டியதைக் கண்டு மகிழ்ந்துபோன அவர், அவனிடம், “தம்பி! நான் பாப்டிஸ்ட் திருச்சபையைச் சார்ந்த ஒரு மறைபோதகர். இன்று மாலை இங்கிருக்கும் ஆலயத்தில் மக்களுக்கு எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதற்கான வழியைச் சுட்டிக்காட்டப் போகின்றேன். நீயும்...

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (Year 2)

                 பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (Year 2) (திப 4: 8-12 ; 1 யோவா 3: 1-2 ; யோவா 10: 11-18) நல்லாயன் இயேசு 1792 ஆம் ஆண்டு மெக்லென் பெர்க்கின் இளவரசர், ஆரஞ்ச் நாட்டின் இளவரசரைச் சந்திக்கச் சென்றார். கப்பல்கள் கடலுக்குள் செல்லும் விழாவிற்கு அயல்நாட்டு இளவரசரை அழைத்துப் போனார் ஆரஞ்ச் நாட்டு இளவரசர். விழாவைக் குறிக்கும் விதமாக கப்பலில் இருந்தவர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் கடலில் தவறி விழுந்துவிட்டான். அடுத்த வினாடியே ஆரஞ்சு நாட்டு இளவரசர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்தார். இதைப் பார்த்து, இளவரசரையும் இளைஞனையும் மீட்க பலரும் குதித்தனர். இறுதியில் இளவரசரை மட்டுமே முடிந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசரிடம், “ஏன் இந்த விஷப் பரீட்சை?” என்று கேட்டபோது அவர் சொன்னார், “என் சொந்த சகோதரன் விழுந்திருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா? கடலில் குதித்து, அவனைக் காப்பாற்றி இருப்பேன் அல்லவா... கடலில் தவறி விழுந்த இளைஞனை என்னுடைய சொந்த சகோதரனாகவே பார்த்தேன். அதனால்த...

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு YEAR 2

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு YEAR 2 (திப 3: 13-15, 17-19 ; 1யோவா 2: 1-5 ; லூக் 24: 35 -48) மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்! பிரபல சிறுகதை எழுத்தாளரான ஓ.ஹென்றி சொல்லக்கூடிய ஒரு கதை. ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அந்தச் சிறுவன் படித்துவந்த அதே வகுப்பில் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவர்மீது மதிப்பும், மரியாதையும், உள்ளார்ந்த அன்பும் வைத்திருந்தார்கள். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேறுவேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். சிறுவன் வளர்ந்து தன்னுடைய கிராமத்திற்கு அருகே இருந்த ஒரு நகரத்திற்கு குடிபெயர்ந்து போனான். அங்கு அவனுக்கு புதிய நண்பர்கள், அதுவும் தீய வழியில் நடக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள். அதனால் அவன் சிறுது காலத்திலேயே கைதேர்ந்த பிக்பாக்கெட் திருடனாக மாறிப்போனான். ஒருநாள் அவன் ஒரு மூதாட்டியிடமிருந்து பர்சை திருடிக்கொண்டு ஆளில்லாத ஒரு வீதியின் வழியாக சென்றுகொண்டிருந்தான். அப்போது திடிரென்று அவனுக்கு எதிரே பள்ளிக்கூடத்தில் அவனோடு படித்த பெண் வந்துகொண்டிருந்த...