மூவொரு இறைவன் பெருவிழா
மூவொரு கடவுள் - year 2
மறையுரைச் சிந்தனை
மூவொரு இறைவன் பெருவிழா
‘உலக முடிவுவரை எந்நாளும் நம்மோடு இருக்கும் மூவொரு இறைவன்!
ஒருமுறை ஒரு நகரப் பங்கில் உறுதிபூசுதல் கொடுப்பதற்காக ஆயர் அவர்கள் சென்றிருந்தார்கள்.
வழிபாட்டின்போது ஆயர், பின்வரிசையில் உறுதிபூசுதல் பெற இருந்த சிறுமி ஒருத்தியிடம், “மூவொரு கடவுள் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார்” என்று பதிலைச் சொன்னாள். ஆனால், சிறுமி சொன்னது ஆயரின் காதில் சரியாக விழாமல் போகவே, அவர் மீண்டுமாக அந்தச் சிறுமியிடம், “நீ சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. மீண்டுமாக அதைச் சொல்” என்றார். சிறுமியோ, “மூவொரு கடவுளைப் பற்றி முழுமையாக விளக்கமுடியாது, அது ஒரு மறைபொருள். அதை அப்படியேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னதும், ஆயர் மிகவும் ஆச்சரியப்பட்டுபோய், அந்தச் சிறுமியை வாழ்த்தினார்.
ஆம், ‘மூவொரு இறைவன்’ என்பது ஒரு மறைபொருள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒழிய, அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம்.
இன்று நாம் மூவொரு கடவுளது பெருவிழாக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில் இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். மூவொரு கடவுளைக் குறித்து திருமறைச் சுவடியில் சொல்லப்படுகின்ற விளக்கம், “யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்பு அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்”.
மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவி இவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர்கள், இவர்கள் எத்தகைய பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என இன்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் தந்தைக் கடவுளைக் குறித்து மிகத் தெளிவாக விளக்குகின்றது. அங்கு மோசே மக்களைப் பார்த்துக் கூறுகின்றார். நெருப்பின் வழியாகப் பேசிய கடவுளை, அடிமைப்பட்டுக் கிடந்த இனத்தை மீட்டு, ஒரு நாட்டையே உரிமைச் சொத்தாகத் தந்த கடவுளை வேறு எங்கேனும் பார்த்ததுண்டா?” என்று. ஆம், கடவுள் என்றால் அவர் வானுலகில் உறைகின்ற கடவுள் கிடையாது, மண்ணுலகில் மக்களோடு மக்களாக இருந்து செயல்படக் கூடியவர் என்பதைத்தான் மேசேயின் வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. ஆகையால், தந்தைக் கடவுளை வரலாற்றில் செயல்படுகின்ற கடவுளாக நாம் புரிந்துகொள்ளலாம்.
தூய ஆவியாரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார், “நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு தூய ஆவியார் சான்று பகர்வார் என்பார். பவுலடியாரின் வார்த்தைகள் உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். ஏனென்றால், ஆண்டவர் இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்கின்றபோது, “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்” என்பார். (யோவா 15:26) ஆகையால், தூய ஆவியார் கடவுளை/ ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகற்கின்றவர் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதோடு மட்டுமல்லாமல், நாம் சான்று பகர்வதர்கான வலுவினையும் தெம்பினையும் தருகின்றார் என்பது உண்மையாக இருக்கின்றது. பெந்தகொஸ்தே நாளில் அதுவரைக்கும் அஞ்சி அஞ்சி வாழ்ந்த இயேசுவின் சீடர்கள், மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்பாக மிகத் துணிச்சலாக நற்செய்தியை அறிவிக்க முடிந்தது என்றால், அது தூய ஆவியினால் அருட்பொழிவாலன்றி வேறெதுவும் இருக்க முடியாது. எனவே, தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நாம் இயேசுவைக் குறித்து சான்று பகர்வதற்கும் துணையாய் இருக்கின்றார் என்பது உண்மையாகின்றது.
ஆண்டவர் இயேசு யார் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது .தூய பவுல், “நாம் கிறிஸ்துவின் பங்காளிகள் என்பார். கிறிஸ்து நமக்குப் பங்காளி என்றால், அவர் நம்முடைய சகோதரர் என்பதே உண்மை. எப்படிப்பட்ட சகோதரர் என்று பார்க்கும்போது, நமது மீட்புக்காக துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்ட சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரர், நமக்காக துன்பப்பட்ட சகோதரர் என்றுதான் நாம் சொல்லவேண்டும்.
‘சகோதர அன்பிற்கு’ உதாரணமாகச் சொல்லப்படுகின்ற ஒரு கதை.
அது அறுவடைக் காலம். அப்போது ஓர் ஊரில் இருந்த உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் அவ்வூரில் இருந்த பண்ணையாரை அணுகி, “ஐயா! நாங்கள் இருவர் மட்டுமே சேர்ந்து உங்கள் வயலில் விளைந்திருக்கும் நெல்லை அறுத்து அதனை மூட்டையாகக் கட்டி களஞ்சியத்தில் சேர்கின்ற வரை எல்லா வேலைகளையும் செய்து தருகின்றோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகத் தரவேண்டும். அது சம்மதமில்லை என்றால், நாங்கள் வேறு ஆட்களைப் பார்த்துக்கொள்கின்றோம்” என்றார்கள். அதைக் கேட்ட பண்ணையார், “நீங்கள் இருவரும் மட்டுமே வேலைசெய்வது என்பது நல்லதுதான். ஆனால், பத்தாயிரம் என்பது அதிகமான தொகை. ஏன் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கின்றீர்கள். இந்த பத்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு அப்படி என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு சகோதர்களில் ஒருவன் அவரிடம், “ஐயா! எங்களோடு பிறந்தது மொத்தம் மூன்று பேர். நான், இவன், வீட்டில் இருக்கின்ற இன்னொரு சகோதரன். அந்த சகோதரனோ கால் ஊனமுற்றவன், அவனால் எங்கேயும் சென்று வேலை செய்யமுடியாது. அவனுடைய வாழ்க்கையையும் நாங்கள் பார்க்கவேண்டும் அல்லவா, அதனால்தான் அவனுக்கும் சேர்த்து நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றோம்” என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பண்ணையார் அவர்கள் இருவரும் தங்களுடைய கால் ஊனமுற்ற சகோதரன் மீது கொண்டிருக்கும் அன்பைக் கண்டு மெச்சினார்.
பின்னர் அவர் அவர்களிடம், “நீங்கள் சொன்னவாறே வேலையைச் செய்துமுடித்துத் தந்தால், நான் உங்களுக்கு நீங்கள் கேட்ட தொகையினைத் தருகின்றேன்” என்றார். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஒருவார காலம் அவர்கள் கடுமையாக உழைத்து, பண்ணையாரின் நிலத்தில் விளைந்திருந்த நெல்லை அறுத்து, அவற்றை அவருடைய களஞ்சியத்தில் சேர்த்தார்கள். சகோதரர்கள் இருவரும் செய்த வேலைப் பார்த்துவிட்டு, “நான் நினைத்ததைவிடவும் மிக நன்றாக வேலை செய்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் கேட்டதைவிடவும் அதிகமான தொகையை, நான் உங்களுக்கு சம்பளமாகத் தருகின்றேன். இதை வைத்து உங்களுடைய சகோதரனை நன்றாகப் பராமரித்துக்கொள்ளுங்கள்” என்றார்.
தங்களோடு பிறந்த கால் ஊனமுற்ற சகோதரனுக்காக அந்த சகோதர்கள் இருவர் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தது போன்று, இயேசு கிறிஸ்துவும் அவருடைய சகோதர சகோதரிகளுக்காக – நமக்காக - பல்வேறு துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்தார் என்பதுதான் உண்மை. அவர் பட்ட பாடுகளின் வழியாக அவர், தன்னுடைய சகோதர சகோதரிகளாகிய நம்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கின்றார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரன் என அழைப்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
இதுவரைக்கும் மூவொரு கடவுள் எப்படிப்பட்டவர் என்று சிந்தித்த நாம், இந்த மூவொரு கடவுள் நம்மிடம் எத்தகைய பணியைச் செய்ய அழைப்புவிடுக்கின்றார், அவருடைய பணியைச் செய்யும்போது அவருடைய பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்வார், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்” என்று. ஆம், நற்செய்தியை அறிவிப்பதும், ஆண்டவர் இயேசு கட்டளையிட்டவற்றை மக்கள் கடைபிடிக்கச் செய்வதுதான் அவருடைய வழியில் நடக்கும் நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது.
நற்செய்தி அறிவிப்பு என்பது வெறுமென ஆண்டவருடைய வார்த்தைகளைப் மக்களுக்குப் போதிப்பது மட்டும் இல்லை, அதனை நாம் வாழ்ந்து காட்டுவது, நம்முடைய வாழ்வையே நற்செய்தியாக மக்களுக்கு விளங்கச் செய்வது, தேவைப்பட்டால் உயிரையும் தருவது அதுதான் உண்மையான நற்செய்தியாக இருக்கும். நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை வார்த்தைகளால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவித்து, மக்களை ஆண்டவர் பக்கம் கொண்டுவருகின்றபோது அதுதான் மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுத்த நற்செய்தி அறிவிப்புப் பணியினைச் செய்கின்றபோது அவருடைய பராமரிப்பு எப்படி இருக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை. இன்றைய நற்செய்தியின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம், “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்” என்று. ஆம். தன்னுடைய பணியினைச் செய்கின்ற இறையடியார்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் கைவிடுவதில்லை, அவர்களைக் கண்ணின் கருவிழி போல பார்த்துக்கொள்வார் என்பதுதான் நிதர்சனம்.
ஆகவே, மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அவர்களிடம் இருக்கும் அன்பையும், அவர்கள் நம்மீது செலுத்தும் அன்பினையும் உணர்ந்துகொள்வோம், அது மட்டுமல்லாமல், இந்த நாளில் அவர் நமக்கு விடுக்கின்ற நற்செய்தி அறிவிப்புப் பணியினை சிறப்புடன் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Comments
Post a Comment