திருவருகைக் கால வளையம் - Advent wreath
திருவருகைக் கால வளையம் - Advent wreath (விக்கிபீடியா (Wikipedia) வழியாக அறிந்துகொண்ட தரவுகளது அடிப்படையில் எழுதப்பட்டது) திருவருகைக் காலம் நமதாண்டவர் இயேசுவின் முதல் வருகையினை எமக்கு நினைவுபடுத்தி உலக முடிவில் அவரது இரண்டாவது வருகையினை எதிர்பார்க்கும் காலமென அன்னையாம் திருச்சபை எமக்குப் படிப்பிக்கின்றது. ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிறைந்த எண்ணக்கருக்களை எமதுள்ளங்களில் விதைக்கும் காலமென்றும் நாம் கருதலாம். எதிர்பார்ப்பு, தயாரிப்பு, வரவேற்பு என்று பல கோணங்களில் திருவருகைக்காலம் எம்மை சிந்தித்துத் தியானிக்க அழைக்கின்றது மேற்குலக நாடுகளில் வாழும் கத்தோலிக்க விசுவாசிகள் திருவருகைக் காலத்தில் குறிப்பாக ஆலயங்களில் வட்ட வடிவமான திருவருகைக் கால வளையம் (Advent wreath) எனப்படும் ஒரு அமைப்பிலே நான்கு மெழுகுதிரிகளை திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு திரியாக ஞாயிறு திருப்பலி வழிபாட்டு வேளைகளில் ஏற்றி வைப்பதுண்டு. மெழுகு திரிகள் ஏற்றப்படுதல் வெளி அடையாளமாக இருப்பினும், அவை மனித இதயங்களில் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி, குடும்பங்களில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் உண்மைத் தன்மையை இழந...