புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) :

புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230) :

செசீலியா உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில் கத்தொலிக்க கிறிஸ்தவத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளான வேதகலாபனையின் காலத்தில் கி.பி.200-ல் ரோமில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே இனிமையாக பாடும் திறமை பெற்றிருந்தார். இறைவனுடைய அன்பிற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தாள். தன்னுடைய கன்னிமையை இயேசுவுக்காக கையளித்தார்.
ஆனால் அவர்கள் பெற்றோர் ஏற்கவில்லை. வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப் பட்டார்
ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். இவரது மன உறுதியையும் திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப் பாடப்பட்ட பாடலிலே தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை உறுதி செய்தார் புனித செசிலியா. அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவளியகக் கொள்ளச் செய்துள்ளது.
திருமணம் முடிந்த அன்று தன் கணவனை நோக்கி "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்குக் காவலராய் இருக்கின்றார் . எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது " என்றார். வலேரியன் அவரைப் பார்த்து , "கடவுளின் அந்தத் தூதரை நான் பார்த்தால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன் என்றார். அப்போது செசீலியா, “ திருமுழுக்கு பெற்றால் ஒழிய அவரைப் பார்க்க முடியாது" என்றார். சுரங்கங்களில் வாழ்ந்த உர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று வலேரியன் திருமுழுக்குப்பெற்றுக் கொண்டார்.
வீட்டிற்குத் திரும்பிய வலேரியன் தன் மனைவியின் அருகில் ஓர் அழகிய வானதூதர் நிற்பதைக் கண்டார். அவர் கையில் ஒரு ரோசா மலையும் ஒரு லீலி மலையும் வைத்திருந்தார் . பிறகு, வானதூதர் அதை இருவருக்கும் அணிவித்து, இவை வாடா மாலைகள்; இவற்றைப் பிறர் காண இயலாது நீங்கள் புனித வாழ்வு வாழ இது உங்களை அறிவுறுத்தும். என மொழிந்து வலேரியனிடம்," நீ விரும்பும் வரம் ஒன்று கேள்" என்றார் அவர்,"எனக்கு ஒரு சகோதரன் உள்ளான் . அவன் பெயர் திபுர்சியுஸ், அவனும் என்னைப்போல் கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான் கேட்கும் வரம் " என்றார். " அவ்வாறே ஆகுக ! இருவரும் வேதசாட்சி முடிபெற்று சான்று பகர்ந்து இறப்பீர்கள்" என உரைத்து மறைந்தார். அவ்வாறே, திபுர்சியுசும் மனம்மாறி திருமுழுக்கு பெற்றபின் தேவதூதரைக்கண்டான்.
உரோமின் அதிகாரி அல்மாகுஸ் என்பவர் இவர்கள் இருவரையும் கைது செய்யும் நாள்வரை வலேரியனும், திபுர்சியும் மிக நல்ல பணிகளைச் செய்துவந்தனர். உரோமின்அதிகாரி அல்மாகுஸ் செசிலியா, வலேரியன், திபுர்சியுஸ் ஆகியோரைக் கைது செய்து அழைத்து வந்தான் . "நம் கடவுள் ஜூபிடருக்கு தூபம் காட்டி வழிப்பட்டால் பிழைப்பீர்கள். இல்லையேல் கொல்லப்படுவீர்கள். என்று எச்சரித்தான். ஜுபிடர் சிலைக்கு முன் இவர்களை அனுப்பினான். மாக்சிமுஸ் என்ற அதிகாரி இவர்கள் மீது பரிவு கொண்டு இவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று உபசரித்தான். இவர்களின் சாட்சியத்தைக் கேட்டு அவனும் அவன் வீட்டாரும் கிருஸ்தவர்களாயினர் .மூன்றுபேரும் வேதசாட்சிகளாக மாறி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
ரோமன் கடவுளுக்கு பலியிட வந்த மக்களை செசீலியா மனந்திருப்பினாள். அவரைக் காணவந்த திருத்தந்தை உர்பன் அவர் இருந்த இடத்தில் நானூறு பேருக்கு அதிகமான பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். செசீலியா கோர்ட்டுக்கு வந்தபோது அல்மாகுஸ் மீண்டும் அவளை மறுதலிக்கக் செய்ய பலமுறை முயன்றான் . அசைக்க முடியாத அவளது நம்பிக்கையைக் கண்டு மூச்சுமுட்டி சாகச் செய்ய தீர்ப்பு வழங்கப் பட்டது . ஒரு அறையில் நெருப்பு மூட்டச்செய்து மிகவும் அதிகமான நெருப்பு வைத்த பிறகும் செசீலியா சாகவேயில்லை. இறுதியாக இவரது தலை வெட்டப்பட உத்தரவு இடப்பட்டபோது, மூன்று முறை வெட்டப்பட்ட நிலையிலும் மூன்று நாள் உயிர் பிரியவில்லை. அந்த வேதனையின் மத்தியிலும் இறைவனைப்பாடி புகழ்ந்த வண்ணம் வாழ்ந்து அதன் பின்னரே இறைவனடி சேர்ந்தார்.
ஜெபம் : அர்ச்.செசீலியம்மாளை உங்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் எங்களுக்கும் கடவுள் ஒரு காவல் தூதரைக்கொடுத்துள்ளார். நாங்கள் பாவங்கள் செய்ய நினைக்கும்போது எங்கள் அருகில் இருக்கும் காவல் தூதரிடம் வேண்டி அந்த பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வரம் தாரும். நாங்கள் தினமும் காவல் சம்மனசானவர் ஜெபம், மிக்கேல் அதிதூதர் ஜெபம், மனவல்ய ஜெபங்களையும் ஜெபிக்க வரம் தாரும். முக்கியமாக நம் நேசர் இயேசுவுக்காய் எல்லாத் துன்பங்களையும் கொடிய சாவையும் ஏற்று இறுதிவரை விசுவாசத்தில் உறுதியார் இருந்ததுபோல் நாங்களும் கடைசிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வரம் பெற்றுத்தாரும் ஆமென்.
புனித செசிலியம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !!!
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)