நகைச்சுவைகள்
அறிவை வைக்க
மறந்துட்டானே...
ஒரு சமயம் கடையத்தில்
உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து,
சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.
பாக்கும் வச்சான்;
பழமும் வச்சான்;
வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;
ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...
சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!
வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;
ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...
சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!
அப்போது அங்கு வந்த
பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.
அருகிலிருந்தோர், " ஏன்
சிரிக்கிறீர்கள்? " என்று கேட்டனர்.
"இப்பாட்டு நம்
மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்" என்றார்
பாரதியார்.
" எப்படி?
"
"தமிழ்நாட்டு
மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லா செல்வம் வச்சான்.
ஆனா, ஒன்னு வைக்க மறந்துட்டானே? "
"என்ன அது ? " என்று
மீண்டும் கேட்டார்கள்.
"அறிவை வைக்க
மறந்துட்டானே, மண்டையில் அறிவை வைக்க மறந்துட்டானே..."
இதைக் கேட்ட நண்பர்கள்
விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
JJJJJ
வேறொரு நல்ல
மருத்துவரை...
மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை
உணர்ந்தார்.
"நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, "யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.
நோயாளி மெல்லிய குரலில் "ஆம்" என்றார்.
"யாரை?"
"வேறொரு நல்ல மருத்துவரை..."

நீங்கள்
யாருக்கு...?
ஆபிரகாம் லிங்கன்
அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்த
ஒருவர், "சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?" என்று
கேட்டார்.
லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.
லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.
JJJJJ
குணப்படுத்தி
விடுவார்கள்.
ஒரு சமயம் இங்கிலாந்தின்
பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச்
சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று
கேட்டார்.
சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.
"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.

பெயர்தான் கெட்டுப்
போகிறது.
டாக்டர் மத்தேயு பெய்லி
என்பவர் ஜார்ஜ் மன்னருக்கு மருத்துவ ஆலோசகர். இலக்கியவாதியும் கூட.
ஒரு நாள் எழுத்தாளர் ரினால்ட்ஸ் என்பவர் தன் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ள மத்தேயுவிடம் வந்தார்.
" டாக்டர், நான் அதிகம் எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகிவிட்டதா? " என்று கேட்டார்.
அதற்கு மத்தேயு , "நீங்கள் அதிகமாக எழுதுவதால் உங்கள் உடல் நிலை கெட்டுப் போகவில்லை. உங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. " என்றார்.

Comments
Post a Comment