சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள் !

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள் !
சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே…
ஆப்பிள்
நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.
ஆரஞ்சு
ஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.
செர்ரி
பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.
பேரிக்காய்
வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்
கருப்பு ப்ளம்ஸ்
ஆன்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.Connecting with people .... Two crucial skills
ஸ்ட்ராபெர்ரி
ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
கிவி
வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.
கொய்யாப்பழம்
நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)