பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு YEAR 2
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
(திப 4:32-35 ; 1 யோவா 5: 1-6 ; யோவா 20: 19-31)
உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கைக் கொள்வோம்!
பல ஆண்டுகளாகக் காடுகளிலேயே வாழ்ந்துவந்த பழங்குடி மனிதன் ஒருவன் ஒருநாள் தற்செயலாக அருகிலே இருந்த ஒரு சிறு நகரத்திற்கு வந்தான். சிறுநகரத்தில் இருந்த ஒரு கடையின் வெளியே முகம்பார்க்கும் கண்ணாடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கண்ணாடிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளி ‘பளிச் பளிச்’ என்று அவனுடைய கண்ணைப் பறிக்கவே, அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எனவே அவன் கடைக்காரரிடம் சென்று, கண்ணாடி ஒன்றைத் தருமாறு கேட்டான். கடைக்காரர், “கையில் பணம் இருக்கின்றதா?” என்று சைகை காட்ட, அவன் இல்லை என்பதுபோல் தலையை ஆட்டினான். பின்னர் கடைக்காரர் அவனுடைய கையில் இருந்த பழங்களை கொஞ்சம் வாங்கிக்கொண்டு, அதற்கு ஈடாக அவனுக்கு ஒரு கண்ணாடியைக் கொடுத்து அனுப்பினார்.
பழங்குடி மனிதன் கண்ணாடியை வாங்கி அதனைக் கூர்ந்து பார்த்தபோது, அதனுள் அவனுடைய தந்தையின் உருவம் இருப்பதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனான். (அவனுடைய உருவம்தான் அதற்கு முன்பாகக் கண்ணாடியே பார்த்திராத அவனுக்கு, அவனுடைய தந்தையின் உருவம்போன்று தெரிந்தது). எனவே, அவன் தனது தந்தையின் உருவம் தெரிகின்ற கண்ணாடியை தன்னுடைய மனைவிடம் காட்டலாம் என்று மிக ஆவலாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றான். ஆனால், போகும்போதுதான் தெரிந்தது தன்னுடைய தந்தையை தனது மனைவிக்குப் பிடிக்காது என்று. அதனால் மனைவிக்குத் தெரியாமலே தன்னுடைய தந்தையின் உருவம் தெரிகின்ற கண்ணாடியை வீட்டில் இருக்கும் மரப்பட்டிக்குள் வைக்கத் தீர்மானித்தான். வீட்டிக்கு வந்தபிறகு அதனை நடைமுறைப்படுத்தினான்.
அவன் ஒவ்வொருநாளும் காட்டுக்கு வேட்டையாடச் செல்லும்போது மரப்பெட்டிக்குள் இருந்த ‘தந்தையின் உருவம்’ தெரிகின்ற கண்ணாடியைப் பார்த்துவிட்டுத்தான் சென்றான். அதை மிகவும் அதிர்ஷ்டமாக நினைத்து வந்தான். தன் கணவரின் செயல்பாடு ஒருசில நாட்களாக வித்தியாசமாக இருக்கின்றது என்பதை அறிந்த அவனுடைய மனைவி அவன்மீது சந்தேகப்படத் தொடங்கினாள். மட்டுமல்லாமல், தன் கணவர் மரப்பெட்டிக்குள் அப்படி என்னதான் மறைத்துவைத்திருக்கின்றார் என்று அவன் போனபிறகு மரப்பெட்டியைத் திறந்து பார்த்தாள். மரப்பெட்டியைத் திறந்துபார்த்தபோது, உள்ளே இருந்த கண்ணாடியில் அவளுடைய முகம் தெரிந்தது. ஆனால், அது அவளுடைய முகம்தான் என்பதுகூடத் தெரியாமல், ‘இந்த கிழவியைப் பார்க்கத்தான் இந்த ஆள் இத்தனைநாளும் வேட்டையாடப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளியே போகிறாரோ, அந்த ஆள் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்” என்று கொலைவெறியோடு காத்திருந்தாள்.
தன்னுடைய தந்தையின் உருவத்தைப் பார்க்கின்றோம் என்று காட்டுவாசி நினைக்க, அவனுடைய மனைவியோ யாரோ ஒரு பெண்ணைத்தான் தன் கணவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று சந்தேகேப்பட்டதைப் போன்று, நாமும்கூட நம்மோடு வாழ்பவர்களை, ஏன் இறைவனைக் கூட சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றோம். இத்தகைய போக்கு தவறானது, அதுவும் இயேசுவின் சீடருக்கு அது இருக்கவே கூடாது என்பதையும், ஆண்டவர் இயேசுவிடத்தில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்பதையும் இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நாம் அதனைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தங்களுக்குத் தோன்றிய செய்தியை சீடர்கள் தோமாவிடம் எடுத்துரைக்கும்போது தோமாவோ, “நான் ஆண்டவரின் கையில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பில் என் கையையிட்டு, அவருடைய விலாவில் என் கையை விட்டாலொழிய நம்பமாட்டேன்” என்கின்றார். எட்டு நாட்களுக்குப் பிறகு சீடர்கள் எல்லாம் குழுமியிருக்க இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்திவிட்டு, தோமாவிடம், “தோமா! என் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பில் உன் விரலையிடு, என் விலாவில் உன் கையை இடு” என்று சொல்ல, அவரோ, “ஆண்டவரே! என் கடவுளே!” என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்புடுத்துக்கின்றார். அப்போது இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்கின்றார்.
இயேசு ‘இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்’ என்று பல முறை தன் உயிர்ப்பைக் குறித்துச் சொல்லியிருக்கின்றார், அது மட்டுமல்லாமல், உயிர்த்த ஆண்டவரை சீடர்கள் கண்ணால் கண்டு, அதனை தோமாவிற்கு அறிவித்திருக்கின்றார்கள். அப்படியிருந்தம் தோமா, மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்வது அவருடைய சந்தேகப் புத்தியைக் காட்டுகின்றதே அன்றி, வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் நாமும்கூட, ஆண்டவர் இயேசுவை முழுமையாக நம்பாமல், அவரை ஒருவிதமான சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கின்றோம். இத்தகைய நிலையைப் பார்த்துத்தான் ஆண்டவர் இயேசு, “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்று சொல்கின்றார். ஆகவே, நாம் நம்மிடம் இருக்கின்ற ஐயப்பாட்டைத் தவித்து, ஆண்டவரிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வது த தேவையான ஒன்றாக இருக்கின்றது.
இயேசுவிடத்தில் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்று சொல்லும்போது, அந்த நம்பிக்கையோடு மட்டும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை முடிவுறுகின்றதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தூய யாக்கோபு தனது திருமுகத்தில் கூறுவதுபோல, நாம் இறைவனிடத்தில் கொள்ளும் நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும். இல்லையென்றால் அது அர்த்தமில்லாததாகிவிடும் (யாக் 2:11). இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து வாழ்ந்தவர்கள் பலர் இருந்தாலும், நமக்கு மிகப்பெரிய முன் உதாரணமாக இருப்பவர்கள் தொடக்ககால கிறிஸ்தவர்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், அவர்கள் எப்படி முன் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அவர்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள்; அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை, எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. அதனால் தேவையில் உழல்வோர் எவரும் அவர்களிடத்தில் காணப்படவில்லை. இதன்வழியாக அவர்கள் மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள்.
இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு வாழும் நாம், தொடக்ககாலக் கிறிஸ்தவர்களைப் போன்று நட்பிலும் பகிர்விலும் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்ப வாழாதது மிகவும் துரதிஸ்டவசமானது.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரிடத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து, உண்மையான நட்புறவிலும் பகிர்விலும் சிறந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments
Post a Comment