Posts

Showing posts from 2016

Christmas novena

Description: A Christmas novena is usually prayed, starting nine days before Christmas. The following novena was composed by an Italian priest, Rev. Charles Vachetta, C.M., in 1721. Most of the material comes from the Old Testament prophecies and the Psalms referring to the promised Redeemer. The novena consists of Opening Responsorial Prayers, Psalm (Let the Heavens Be Glad), Scripture Reading, Magnificat with Daily Antiphon and Closing Prayer. This novena is prayed in conjunction with the O Antiphons, and if you are using an O Antiphon House or Tower, you would open the windows during this prayer. Prayer: Opening Prayers: Leader:  O Lord, open my lips. All:   And my mouth shall proclaim Your praise. Leader:  O God, come to my assistance. All:   O Lord, make haste to help me. Leader:  Glory to the Father and to the Son and to the Holy Spirit.               ...

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்...

உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா? “நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான். சாமி யோசித்தார். “சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. “நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார். “ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”. “சரி… அப்புறம்?” “நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”.. “ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான். அன்றில...

கிறிஸ்து பிறப்பை அர்த்தமாகும் அடையாளங்கள்

கிறிஸ்து பிறப்பை அர்த்தமாகும் அடையாளங்கள் (பாகம் I) டிசம்பர் 10ஆம் திகதி இயேசு பாலன் பிறப்பதற்கான குடிலுக்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, குடிலுக்கு முன்னால் நின்று எப்படிச் செய்திருக்கிறோம் என்று குடிலின் அழகை சற்றேரசித்துக் கொண்டிருந்தேன் திடீரென பின்னாலிருந்து 'என்ன அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்ற செல்லமான அடி ஒன்று முதுகைப் பதம் பார்த்தது. 'வாங்க பாதர் இப்பத்தான் முதல் முறையா குடில் செய்கிறேன் அதான் ..." 'ரொம்ப நல்லாத்தான்டா தம்பி செஞ்சுருக்க! இதுவரை எந் த வருஷமும் பார்க்காத அளவுக்கு மிக எளிமையாக, அருமையாகச் செய்திருக்கிறாய்" என்று சொல்லிக்கொண்டே, 'அதெல்லாம் இருக்கட்டும் இந்தக் குடிலைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோனுது?" ஒரு கேள்வியோடு மேலும் கீழும் பார்த்தார். 'என்ன தோனுதுன்னா? என்ன சொல்றது? எனக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தான். உள்ளத்தில் முணுமுணுப்பதை உணர்ந்தவராய் மீண்டும் இந்த குடிலில் இருக்கின்ற ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் ஒரு அடையாளங்கள், நம்முடைய வாழ்வில் நாம் எப்படி வாழவேண்டுமென்றும், அப்படி வாழ்ந்தால் நமக்கு கிடைக...

புறம் பேசாதீர்

படிக்கவேண்டிய கதை! பகிர்கிறேன்! புறம் பேசாதீர் காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான். மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறத...

அருளடையாளங்கள் ஓர் விரிவான பார்வை †

Image
† அருளடையாளங்கள் ஓர் விரிவான பார்வை † கடந்த பதிவுகளில் திருப்பலியின் மறையுன்மைகள் மற்றும் அதன் உட்கூறுகள் தொடர்பான பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது இருந்தது என நினைக்கிறேன். தொடர்ந்து அருளடையாளங்கள் என்னும் பதிவின் ஊடாக ஒரு முழுமையான விளக்கத்தை தர முற்படுகிறோம்; இப்பதிவு திருவருட்சாதனங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே இப்பதிவுகளை copy or share செய்து அனைவரும் பயன் பெற உதவும்படி கேட்கிறோம். மேலும் மறைக்கல்வி வகுப்புக்களில் மாணவர்களுக்கு இதனை இதனை பயன்படுத்தி கற்பிக்கும் படியாகவும் கேட்டுக்கொள்கிறோம். இதுவே நாம் எதிர்பார்க்கும் உங்களிடம் எதிர்பார்க்கும் உதவியாகும். சரி விடயத்துக்கு வருவோம்...................... மனிதன் தனது எண்ணங்களை, ஏக்கங்களை, விழுமியங்களை சடங்குகள் வழியாக வெளிப்படுத்துகின்றான். ஒரு சமூகமும் அவ்வாறே செயலாற்றுகின்றது. ஒவ்வொரு மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து மதங்களிலும் தமது நம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்ப சடங்குகள் அவசியமாகின்றது. இச்சடங்குகளிலே அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கிறிஸ்த...

சித்த மருத்துவ முறை

மூட்டுவலி !!! பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது. இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ முறையினில் ஏராளமாக உள்ளது. மருந்துகள் : 1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடவும். இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும். 2 -வாயு சூரணம் : சுக்கு -50 -கிராம் மிளகு -50 -கிராம் திப்பிலி -50 -கிராம் சீரகம் -50 -கிராம் ஏல அரிசி -25-கிராம் இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும். உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும். இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட "வாத நாராயணன் தைலம்"செய்து தடவலாம். ============================================================ வாத நா...

மகிழ்ச்சியை தேடுங்கள்!

[† திருவருகைக்காலம் ~ மூன்றாம் ஞாயிறு † (11 டிசம்பர் 2016) † எசாயா 35:1-6,10 † யாக்கோபு 5:7-10 † மத்தேயு 11:2-11 மகிழ்ச்சியை தேடுங்கள்! 'மகிழ்ச்சியை திறங்கள்!' - ‘Open Happiness!’ - என்கிறது கோகோ-கோலா! 'மகிழ்ச்சியை வாங்குங்கள்!' - ‘Buy Happiness!’ - என்கின்றன ஆன்லைன் கடைகள்! 'மகிழ்ச்சியை தேயுங்கள்!' - ‘Swipe Happiness!’ - என்கின்றன வங்கிகளின் டெபிட் கார்டுகள்! 'மகிழ்ச்சியை தேடுங்கள்!' - ‘Search Happiness!’ என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு! திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'மகிழ்ச்சி ஞாயிறு' என நாம் கொண்டாடுகிறோம். மகிழ்ச்சியைப் பற்றி நாம் மூன்று மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றோம்: மூடநம்பிக்கை 1: 'அதிகம் பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!' சின்ன வயசுல சிகரெட் அட்டைகளை நாம் சேர்த்து வைத்து விளையாடியிருக்கிறோம். அதிகமாக சிகரெட் அட்டைகள் சேர்த்து வைத்திருக்கும் சிறுவனே அவனது கூட்டத்தில் பலசாலி எனக் கருதப்படுவான். ஆனால் கொஞ்சம் வயது வந்த பிற்பாடு அவன் தன் சிகரெட் அட்டைகளை வெளியே கொண்டு வந்து, 'நான்தான் அத...

திருவருகைக்கால 02ம் வார ஞாயிறு

Image
திருவருகைக்கால 02ம் வார ஞாயிறு “பதராக புறம்பே தள்ளப்படுவோமா?“ மத்தேயு 03 : 01 – 12 ஆண்டவராம் இயேசுக்கிறிஸ்து எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவமதில் வந்து பிறப்பதற்கு ஆயத்தமாக நாம் என்ன செய்கிறோம்? வாழ்த்துக்கள் அனுப்புவதிலும், எமது வீடுகளை அலங்கரித்து, விருந்துகள் வழங்கு வதற்கும் சிந்திக்கும் நாம், திருவருகைக் காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் எமது ஆண்மீக வளர்ச்சி தொடர்பாக அக்கறையோடு சிந்திப்பதுண்டா? நமதாண்டவர் இயேசுவின் வருகைக்காக, இஸ்ராயேல் மக்களைத் தயார் செய்ய வந்த திரு முழுக்கு யோவான், “மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது“ (மத்தேயு 3:2-3) எனப்பறைசாற்றி, வர விருக்கும் கடவுளின் வருகைக்காக, மக்கள் அனை வரையும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த அழைப்பு விடுக்கிறாரென திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறில் நற்செய்தியாளர் மத்தேயு தெரிவிக்கின்றார். நற்செய்தியை ஆழமாக நோக்குமிடத்து, நீதியுள்ள கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க நமது மனமாற்றத்தை நற்செயல்கள் மூலம் வெளிப்படுத்துமாறு திருமுழுக்கு யோவான் வலியுறுத்தி “நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போட...

மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08) - தூய கன்னிமரியாளின் அமலோற்பவ பெருவிழா

மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08) - தூய கன்னிமரியாளின் அமலோற்பவ பெருவிழா 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார். ஆம், இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்‘ (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியத...