புனித வியாழன் என்ற பெரிய வியாழன்,



புனித வியாழன் என்ற பெரிய வியாழன்,
வியாழக்கிழமைகளில் பெரும்பேறு பெற்ற நன்நாள்.

ஆம்,இந்நாளில் தான் மகோன்னதமான,
ஆசீர்வாதமான,
பரிசுத்தமான,
நம்பிக்கையான,
தூய்மையான,
சகோதரத்துவமான குருத்துவம் உருவானது.

குருத்துவம் இல்லையேல் திருஅவை இல்லை.

குருத்துவம் இல்லையேல்
கிறிஸ்தவம் இல்லை.

உன்னத குருத்துவம் இல்லையேல் திருவருட்சாதனங்கள் இல்லை.

கறையகற்றி தூய ஆவியை உட்புகுத்தி ஆசீரளித்தது இந்த அருமை குருத்துவம்.

மெய்யாகவே இறைவேண்டலில் ஆன்ம உணவை அருள்வது  இனிய குருத்துவம்.

சங்கடப்படுவோரையும், மனமுடைந்தோரையும், இன்சொல்லால் இறை மக்களாக்கியது மன்னிக்கும் குருத்துவம்.

இல்லம் மந்திரிக்கவும்,உள்ளம் உற்சாகப்படுத்தவும்,
நல்லன துவங்கவும்,
இழப்பில் தைரியமளிக்கவும்,
நமக்கு நம்பிக்கையளிக்கவும்,
நம்மோடு பயணிக்கவும்,
நமக்காக செபிக்கவும் அன்பர் இயேசு நமக்களித்த ஒரே ஆயுதம் குருத்துவம்.

இந்த குருத்துவத்தை காலமெல்லாம் போற்றுவோம்.

இந்த குருத்துவத்துவத்துக்கு வாழ்நாளெல்லாம்
 நன்றி சொல்வோம்.

இந்த குருத்துவம் மென்மேலும் இறைப் பற்றோடு நம்மை வழிநடத்த செபிப்போம்.

குருத்துவ மாண்புகளை பாதுகாப்போம்.


Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)