பிறந்தநாள் வாழ்த்துகள்
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். இது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் வெளியிடப்பட்டது ....
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
நீ நீடு வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
வளர்ந்து வாழ வேண்டும்
வளர்ந்து வாழ வேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
எட்டுத்துக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழத வேண்டும்
நிலவுத் தாளில் எழத வேண்டும்
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ...
பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-கவிஞர் அறிவுமதி
YouTube Link:www.youtube.com/watch?v=6n3tXhytP8I
Comments
Post a Comment