ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு (31-03-2018) (புனித சனி நடுஇரவு திருப்பலி வாசகங்கள்) பாஸ்கா திருவிழிப்பு பாஸ்கா திருவிழிப்புக்கென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் தரப்பட்டுள்ளன. தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, இவ்வாசகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம். என்றாலும் பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது இருக்கவேண்டும்; ஆனால் மிக முக்கியமான காரணங்கள் இருந்தாலும்கூட, ``செங்கடலைக் கடத்தல்" பற்றிய விடுதலைப் பயண நூல் வாசகம் (3ஆம் வாசகம்) ஒருபோதும் விடப்படலாகாது. மூன்று பழைய ஏற்பாடு வாசகங்களுக்குப் பின் திருமுகமும், நற்செய்தி வாசகமும் வாசிக்கப்படும். இன்றைய திருப்பலி வாசகங்கள் : 1. தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:3 , 2. பதிலுரைப் பாடல் : விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 3. யாத் 14:15-15:1, 4. எசாயா 54:5-14 5. எசாயா 55:1-11 6. எசேக்கியேல் 36:16-28 7. உரோமையர் 6:3-13 8. மாற்கு 16:1-7 திருப்பலி முன்னுரை சாவை வீழ்த்தி வெற்றி கிடைக்க சரித்திர நாயகன் இயேசு, உயிர்க்கப் போகும் உன்னத இரவு இன்று...