Thoughts 2

வெற்றி வேண்டும் தோல்வி வேண்டாம்
இன்பம் வேண்டும் துன்பம் வேண்டாம்..!!
பிறப்பு வேண்டும் இறப்பு வேண்டாம்
ஆனால்..!!
இரவு இல்லாமல் பகல் ஏது..?
கெட்டது இல்லாமல் நல்லது ஏது..?
அசிங்கம் இல்லாமல் அழகு ஏது..?
ஒன்றல்லவா மற்றொன்றை உருவாக்குகிறது நாம் ஏன் எதன் மீதும் விருப்பு வெறுப்பு கொள்ளவேண்டும்?


#இரவின்__மடியில்
பால் வடியும் முகம் கண்டு
பல கவலைகள் மறந்துப் போகும்..!!
கள்ளமில்லா சிரிப்பைக் கண்டால்
கல் நெஞ்சமும் கரைந்து போகும்..!!
பாரம் நிறைந்த வாழ்வினில் பிஞ்சுப் பாதங்கள் நம் நெஞ்சில் பதிந்தால்
மன அழுத்தங்களும் அடங்கிப் போகும்..!!


பெண்ணே பழகிக் கொள் கோடுகளை நேராகவும் வளைத்தும் வட்டமாகவும்..!!
சதுரமாகவும் புள்ளியைச் சேர்க்கவும்
கோர்க்கவும் வண்ணங்களை
கலக்கவும் விலக்கவும்
நன்கு கற்றுக் கொள்..!!

பெண்ணே உன் பார்வையின் கூர்மையும்
விரல்களின் வீச்சும்..!!
#எண்ணங்களின்_வண்ணங்களும்..!!
உன் வாழ்க்கைக் கோலத்தை
வர்ணமயம் ஆக்கட்டும்..!!


நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்..!!
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

#பின்பற்ற_முயற்சி_செய்வோம்..!!


நிறத்தை மட்டும்வைத்து
முகங்கள் ஞாபகம்வைத்து
கொள்ளப்படுவதில்லை..!!
முகத்திலே தோன்றும் அழகிய பொன் சிரிப்பைத்தான் ஞாபகம் வைத்துக்கொள்ள
முடிகிறது..!! 



நிகழ்காலம் என்பது ஓடிக்கொண்டிருக்கிற ஆற்று வெள்ளத்தைப் போல்..!!
கடந்த காலமாகிய மலையிலிருந்து தான் அது உற்பத்தியாகிறது என்றாலும்..!!
எதிர்க்காலமாகிய கடலை நோக்கித்தான் அது ஓடுகிறது..!!

இஷ்டத்துக்கு வாழலாம் என்றால்
நீ ஏதோ வொரு மிருகமாய் படைக்கப்பட்டிருப்பாய்..!!
#ஆனால்..?
மனிதத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்திடவே மனிதனாய் உருவெடுத்துள்ளாய்..!!


நீ அழும் போது உன் கண்ணீரைத் துடைக்க யாரும் இருப்பதில்லை..!!
நீ கவலைப்படும் போது சிரிக்க வைக்க யாரும் இருப்பதில்லை ஆனால்..!!
நீ ஒரு தவறு செய்தால் போதும் உன்னை விமர்சிப்பதற்கு இந்த உலகமே கூடி வரும்..!!

எல்லா நேரங்களிலும் மனம் விட்டுப் பேசுவதற்கும்..!!
அன்பு காட்டுவதற்கும் ஒருவர் கிடைத்து விட்டால்..!!
இந்த ஒரு வாழ்க்கையே போதுமெனத் தோன்றும்..!!
#பேசப்படாத_உணர்வுகள்

நிச்சயமாய் என்று சொல்ல எதுவும் இல்லை இந்த நிமிடங்களை தவிர..!!
எதிர்பார்ப்புகளை தள்ளி வைத்து கொஞ்சமேனும் வாழ பழகுங்கள்..!! 



வாழ்க்கைல கடினமான நேரம் நமக்கு மட்டுமே தான் வருதுனு நினைச்சா அது நம்ம அறியாமையாத்தான் இருக்கும்..!!
கஷ்டங்கள் இல்லா வாழ்கை யாருக்கும் இல்லை துன்பத்தை கலைந்து மகிழ்ச்சியை தேடி அடையுங்கள்..!!



முயற்சி என்பது உடலில் இல்லை நாம் செய்யும் செயலில் இருக்கிறது..!!
ஒரு முழு சோற்றுப் பருக்கையை இழுத்துச் செல்லும் எறும்பு சொல்லாமல் சொல்லியது..!!


அன்பை மனைவியாக்க உனக்கு அன்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும்..!!
அழகை மனைவியாக்க உனக்கு நிறைய செலவு செய்ய தெரிந்திருக்க வேண்டும்..!!
#அன்பும்_அழகே


உன் மனதில் இப்போது ஏதாவது கெட்ட சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் கண்டிப்பாக உனக்கு எந்த உருப்படியான வேலையும் இல்லை
என்று அர்த்தம்..!!
அதனால் உடனே ஏதாவது ஒரு பணியில் உன்னை முழுமையாக ஈடுபடுத்தி உன்னை நீயே காப்பாற்றிக்கொள்..!!
#உன்னை_நீ_இழந்து_விடாதே..!!


இயலாது என்ற வார்த்தையைக் கூறி
உன் விழிகளை நீயே மூடிக் கொள்ளாதே..!!
தமிழ் அகராதியில் மட்டும் இருக்க வேண்டிய வார்த்தை அது உன் அகராதியில் அல்ல..!!
இயலும் என்ற வார்த்தையைக் கூறி
உன் விழிகளை நீயே திறந்து கொள்..!!
விழிகளை விரைவாய் திறந்துப் பார்த்து
வெற்றி எனும் பாதையில்
பயணத்தைத் தொடர்..!!
இனிதாய்த் தொடர்ந்த இன்பப் பயணத்தின் இடையில் தோல்வி எனும்
பாதை வரலாம்..!!
தடைக் கற்களும் உன்னால் செதுக்கப்பட வேண்டும் வெற்றிப் படிக்கட்டுகளாக..!!


மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல..!!
இடையூறும்,துன்பம் வறுமையலிலும் வஞ்சனை செய்யாத ஒன்று இருக்கு மானால் அது சிரிப்பு மட்டுமே..!!


உன்னை பிடித்த ஒருவரிடம் உன்னை நீ அடையாளப்படுத்துகிறேன் என்று..!!
உன் அடையாளங்களை இழந்துவிடாதே நீ நீயாகவே இருப்பதை விட சிறந்த அடையாளம் எதுவுமில்லை..!!

குழந்தையின் புன்னகை உன்னை ஞாபகப்படுத்துகிறது..!!
உன் ஞாபகம் என்னை குழந்தையாக்கி விடுகிறது..!!
சிறு பிள்ளையின் முதல் புன்னகையில் தொடங்கி பெருமழையின் கடைத்தூறலில் முடிகிறது உனக்கான என் கவிதை..!!
#என்_கவிதை_நீ..😍 




Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)