#நேரங்கள்*

புத்தகங்களுடன் செலவழிக்கும் நேரங்கள்! நம்மை வெளிச்சத்திற்கு இட்டுச்செல்லுமே!
நண்பர்களுடன் செலவழிக்கும் நேரங்கள்! கவலைகளை நம்மிடமிருந்து விரட்டவைக்குமே!
குழந்தைகளுடன் செலவழிக்கும்
நேரங்கள்!
நம்மையும்
மழலையாக்கி மீண்டசொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லுமே!
பெற்றோருடன்
செலவழிக்கும் நேரங்கள் தெய்வத்துடன் நம்மை சங்கமமாக்கிடுமே!
ஆலயத்தில்
செலவழிக்கும் நேரங்கள்! மனதின் மாசுகளைப் போக்கி புனிதனாக மாற்றவைக்குமே!
விளையாட்டில் செலவழிக்கும் நேரங்கள்! மனதையும் உடலையும் ஒருசேர வலிமையாக்குமே!
கற்பித்தலில் செலவழிக்கும் நேரங்கள்! வருங்காலத் தலைவர்களை உருவாக்க வைக்குமே!
உழைப்புடன் செலவழிக்கும் நேரங்கள்! வியர்வைக்குப் பரிசாக செல்வத்தை வாரித்தந்து உன்னை உயர்த்திடவைக்குமே!
சோம்பலுடன் செலவழித்த நேரங்கள்! நம்மை வாழ்வின் இருட்டில் தள்ளிடுமே!
ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு நேரங்கள்! அவரவர் வாழ்வினில்
அவரவர் நேரங்களை செலவழிக்கும் விதங்களில்!

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)