#உலகம் - உன்னை அண்ணார்ந்து பார்க்கும்
#தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை - உன்
ஏட்டினில் பதித்து விடு
எல்லோர்க்கும் எல்லாமே
அமைவது இல்லை
எது அமைந்ததோ - அதனையே
அரவணைக்க கற்றுக்கொள்
போன பாதைகள்
சேறும் சகதியுமாக இருக்கலாம்
போகின்ற வழிகள்
வெகு தூரமாகவும் இருக்கலாம்
உன்பாத வழியோ
நேர் வழியாக இருந்தால் - உன்னை
#நெருங்கவும் முடியாது
#அசைக்கவும் முடியாது
வாழ்ந்து காட்டி விடு
வானம் போல்
#உலகம் - உன்னை
அண்ணார்ந்து பார்க்கும்..
இனிய இரவு வணக்கம் உறவுகளே..!
Comments
Post a Comment