குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதையுங்கள்... THOMAS ALVA EDISON*

*THOMAS ALVA EDISON*

சிறுவயதில் ஒர் நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவருடன் வந்தார்... உள்ளே உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தார்...
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்...
“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .
எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..!
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது என்ன தெரியுமா....
“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்... பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்
மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனாக ஆனான்... என்று.
தன்பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்” அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..!
வீண்... என யாரும் இங்கே படைக்கப்படவில்லை...
உள்ளுக்குள்ளே உள்ள திறனை அறிவது கடினம் தான்...
கண்டுணர்ந்தால்...
சிகரம் தொடுதல் நிச்சயம்
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதையுங்கள்...

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)